உண்ணாவிரதத்தை முடித்தார் திருமா

thirumma.jpgஇலங்கையில் உடனே போரை நிறுத்தி அப்பாவி தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், சென்னையை அடுத்த மறை மலைநகரில் கடந்த 15-ந் தேதி  உண்ணாவிரதம் தொடங்கினார்.  இன்று நான்காவது நாட்களாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

அவரது உடல் நலன் கருதி, தமிழக முதல்வர் கருணாநிதி,  பாமக நிறுவனர் ராமதாஸ்,  ஆற்காடு வீராசாமி,  தா.பாண்டியன்.  என்.வரதராஜன் உட்பட பல்வேறு அரசியல்  தலைவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்தினர். இன்று திருமாவளவனின் தாயார் பெரியம்மாவும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் இன்றூ மாலை  பாமக நிறுவனர் ராமதாஸ், ஈழ போராட்டத்திற்கு உண்ணாவிரதம் சரியல்ல. வேறு வகையில்  போராடுவோம் என்று சமாதானப்படுத்தி பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • BC
    BC

    நாடகம் முடிக்கப்படும் என்று தெரியும் தானே.

    Reply
  • padamman
    padamman

    இந்தாளின் உண்ணாவிரதம் எப்படி முடியும் என்று எல்லோருக்கும் தெரியும் இனிமேல்லாவது ஈழத்தமிழிரை வைத்து அரசியல் வியபாரம் செய்ய வேண்டாம்.

    Reply
  • Danu
    Danu

    /திருமால்வளவனின் நோக்கம் வேறு வகையானது. திலீபனைப்போல் இறக்கமாட்டார் இவர். தேர்தலுக்கு முன் “யூஸ்” குடித்து உங்களுக்கு முன் எழுந்து நிற்பார் இவர்./ chandran.raja said on January 16

    Reply
  • vanthiyadevan
    vanthiyadevan

    hello … get ready for next action

    Reply
  • palan
    palan

    One man show is over. Thiruma strictly followed the script. Congratulations. By the way You are not hailing from a performing artists cast? Are U Thiruma?

    Reply
  • ashroffali
    ashroffali

    உண்மையில் எந்த உயிரும் அநியாயமாக இழக்கப்படக் கூடாது. அந்த வகையில் திருமாவளவன் அவர்கள் தமது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டது குறித்து விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்கின்றேன்.

    மேலும் இலங்கைத் தமிழரின் உண்மையான நலனில் அக்கறை கொண்டு உண்ணாவிரதம் மேற்கொணடிருந்தால் நீங்கள் பாராட்டப்பட்டிருப்பீர்கள் திருமாவளவன் அவர்களே.ஆனால் நீங்களோ வாங்கின காசுக்கு புலிக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்து உங்கள் அரசியல் இமேஜை நீங்களாகவே கெடுத்துக் கொண்டுள்ளீர்கள்.

    சத்தியாக்கிரகம் உண்ணாவிரதம் அறவழிப் போராட்டம் என்பதெல்லாம் இவ்வாறான செயல்களால் மதிப்பிழந்து போய் விடும். அகிம்சா வழிப் போராட்டங்கள் எல்லாம் பம்மாத்தாகி விடும். எனவே குறுகிய நோக்கங்களுடன் அவற்றை நாடாமல் இருப்பது நல்லது.

    மற்றபடி இலங்கைத் தமிழர் ஒரு போதும் கல்வியிலோ வேலை வாய்ப்பிலோ சாதி அடிப்படையில் ஒதுக்கப்பட்டதில்லை. ஆலயங்களில் அனைத்து மக்களும் சமமாக சென்று வழிபடுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. அவ்வாறான நிலையில் நாங்கள் இந்திய மக்களை விட எவ்வளவோ மேலானவர்களாகவே இருக்கின்றோம்.ஆனால் அங்குள்ள மக்களில் பலர் சாதிய அடக்குமுறைக்கு ஆளாகி மேற்கண்ட அனைத்து உரிமைகளையும் இழந்து நிற்கும் தமிழகத்தின் தமிழர்களுக்காக உங்கள் போராட்டத்தைத் தொடருங்கள் அதற்கு என்றும் எங்கள் ஆதரவும் கிடைக்கும். அது தொடர்பாக நீங்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்கள் என்றைக்கும் எங்கள் பாராட்டுக்கும் மரியாதைக்கும் உரியவை. அதற்காக என்றும் உங்கள் மேல் அபிமானமும் கெளரவமும் வைத்துள்ளோம். அதற்குப் பதிலாக வீணாக புலிகளை காப்பாற்ற அவர்களுக்கு ஆதரவாக இன்னொரு தடவை இப்படியான போராட்டடங்களில் இறங்க வேண்டாம். இதுவே எனது தாழ்மையான வேண்டுகோளாகும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    திருமாவளவன் உண்ணாவிரதமென்ற போர்வையில் தனது கட்சியினரை வன்முறையாளர்களாக்கியது தான் நடந்தது. தமிழக அரசின் வன்முறையாளர்களை கண்டதும் சுடும்படியான உத்தரவு தான் திருமாவளவன் தந்திரத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.

    அதுசரி இலண்டனிலும் நம்ம ஒருவர் தானும் உண்ணாவிரதமிருப்பதாக பிலிம் காட்டிணார் அந்தப் பிலிம் எப்போ முடிவுக்கு வந்தது. இப்படியான செயல்களால் தியாகி திலீபன், அன்னை பூபதி போன்ற தியாகிகளை இவர்கள் கேவலப்படுத்துகின்றார்கள் என்பதே உண்மை.

    Reply