அமெரிக்காவில் கொரோனா தொற்ற விஸ்வரூபம் எடுத்தபோதும் கூட முகக்கவசம் அணியமாட்டேன் என்று கூறியவர் அமெரிக்கஜனாதிபதி டொனால்டு டிரம்ப். ஆனால் நாட்கள் செல்ல செல்ல எதிர்க்கட்சிகள் வற்புறுத்தல், உலகத் தலைவர் என்பதால் மாஸ்க் அணிந்தார்.
கடந்த வாரத்தில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெள்ளை மாளிகை திரும்பிய டொனால்டு டிரம்ப் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார். அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் கலந்து கொள்ள தீவிரம் காட்டி வருகிறார். புளோரிடாவில் தேர்தல் பிரசாரத்திற்கான முன்னோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது மாஸ்க் அணியாமல் மேடையில் தோன்றினார்.
அப்பேது டொனால்டு டிரம்ப் ‘‘நான் மிக்க உறுதியாக இருப்பதாக உணர்கிறேன். ஒவ்வொருவரையும் முத்தமிட விரும்புகிறேன்’’ என்று தனது வழக்கமான நகைச்சுவை உணர்வுடன் கூறினார். கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமடைந்துள்ள ட்ரம்ப் மீண்டும் தேர்தல் களத்துக்கு இவ்வளவு உத்வேகமாக வருகை தந்துள்ளமையானது அவருடைய ஆதரவாளர்களிடையே மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.