தெபானம பன்னிப்பிட்டியவிலுள்ள எம்.ரி.வி., எம்.பி.சி. ஊடக நிறுவனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மூவர் பொலிஸாரிடம் சரணடைந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித குணசேகர தெரிவித்தார். கடந்த 6 ஆம் திகதி அதிகாலை எம்.ரி.வி. நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கோட்டே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையிலேயே கோட்டே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர மாநகர சபையின் உறுப்பினர் ஒருவர் உட்பட மூவர் நேற்று இச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் சரணடைந்திருப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர தெரிவித்திருக்கிறார்