ஏ 9 பாதையூடாக இரண்டு மாதங்களில் பஸ் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும் -அமைச்சர் டலஸ் அழகப்பெரும

bus-17o1.jpgஏ9 பாதையூடாக இரண்டு மாதங்களில் பஸ் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். தற்போது வவுனியாவில் இருந்து வன்னிக்கு பொதுமக்களை அனுப்பும் பணியில் இ.போ.ச. பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் 20 வருடங்களுக்குப் பிறகு இச் சேவை நடைபெற்றுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். வன்னிப் பகுதியில் இருந்து வவுனியாவுக்கு வந்தவர்கள் அண்மையில் அனுப்பப்பட்டனர்.

பாதுகாப்பு படையினர் இப்பகுதி வீதிகளில் இடங்களில் உள்ள கண்ணிவெடிகள், மிதிவெடிகளை அகற்றி பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க இரண்டு மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளனர். அதனால், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதும் ஏ9 பாதையூடான பஸ்சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார். நிலமை சீரடைந்ததும் முல்லைத்தீவு, கிளிநொச்சி டிப்போக்களுக்கு புதிய பஸ்களை அனுப்பி அந்த டிப்போக்களை இயங்கவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக இ.போ.ச. உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக இ.போ.ச. அதிகாரிகள் ஆராய்ந்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.ஏ9 பாதையூடாக இரண்டு மாதங்களில் பஸ் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

தற்போது வவுனியாவில் இருந்து வன்னிக்கு பொதுமக்களை அனுப்பும் பணியில் இ.போ.ச. பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் 20 வருடங்களுக்குப் பிறகு இச் சேவை நடைபெற்றுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். வன்னிப் பகுதியில் இருந்து வவுனியாவுக்கு வந்தவர்கள் அண்மையில் அனுப்பப்பட்டனர். பாதுகாப்பு படையினர் இப்பகுதி வீதிகளில் இடங்களில் உள்ள கண்ணிவெடிகள், மிதிவெடிகளை அகற்றி பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க இரண்டு மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளனர். அதனால், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதும் ஏ9 பாதையூடான பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார். நிலமை சீரடைந்ததும் முல்லைத்தீவு, கிளிநொச்சி டிப்போக்களுக்கு புதிய பஸ்களை அனுப்பி அந்த டிப்போக்களை இயங்கவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக இ.போ.ச. உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக இ.போ.ச. அதிகாரிகள் ஆராய்ந்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

29 Comments

  • thampu
    thampu

    அப்படி பயணிக்க போகின்றவர்களை மேலே அனுப்ப புலி தயாராகி விடுமே.

    Reply
  • மாற்றுகருத்துதோழர்
    மாற்றுகருத்துதோழர்

    சங்குபிட்டி பாதை தாண்டி ஏ 32ல் ஒடிய பஸ்கள் களைச்சு போச்சாம் அதுதான் ஏ9 ல் ஒடபோகுதாம். மட்டக்களப்பில் மீண்டும் கீபிராம்.

    Reply
  • ashroffali
    ashroffali

    //மட்டக்களப்பில் மீண்டும் கீபிராம்.//
    மாற்றுக் கருத்துத் தோழர் மட்டக்களப்பில் எங்கே எப்போது கிபீர் தாக்குதல் நடத்தியது என்பதை அவர் அறியத் தருவாரா? ஆதாரமற்ற பொய்த் தகவல்களை முன்வைப்பதற்கு அவர் முன்வருவாரா?

    Reply
  • Soma
    Soma

    எந்த வீதியில பஸ் ஓடினால் என்ன பயன்பெறப் போவது மக்கள்! அரசாங்கம் பாதைகளை விடுவித்த மாத்திரமே பஸ் விடக்கூடியதாக வீதிகள் இருந்தனவா? புலிகளின் கண்ணிவெடி விதைப்பை அறுவடை செய்யவேண்டாமா?…….

    Reply
  • மாற்றுகருத்துதோழர்
    மாற்றுகருத்துதோழர்

    இன்று காலை மட்டக்களப்பு நகர்பகுதியில் இரு கிபீர் மிகையொலி விமானங்கள் வான்பறப்பினை மேற்கொண்டன.Tuesday, 20 January 2009- tamilskynews.com
    சரியாக 10.30 மணிக்கு மட்டக்களப்பு நகர்பகுதியை ஊடறுத்து இரு கிபீர் மிகையொலி விமானங்கள் அம்பாறை காட்டுப்பகுதிக்குள் பிரவேசித்ததாக கிழக்குத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நகர்பகுதியில் உள்ள பாடசாலை மாணவ மாணவியர் கிபீர் விமானங்களின் மிகையொலி காரணமாக பீதியடைந்து பாடசாலைகளை விட்டு வெளியே ஓடியதாகவும் குறிப்பாக பாலர் பாடசாலை மாணவர்கள் அலறிக்கொண்டு ஓடியதாகவும் இதனால் சில நிமிடங்கள் அங்கு அசாதாரண சூழ்நிலை காணப்பட்டதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

    Reply
  • palli
    palli

    எதை வேண்டுமானாலும் ஓடவிடுங்க. ஆனால் மக்கள் மீது மட்டும் ஏத்தாதையுங்கோ.

    Reply
  • thampu
    thampu

    மட்டக்களப்பில் கிளைமோர் வெடித்ததாக தான் செய்திகள் வெளியாகியுள்ளன. வன்னியை விட்டு விட்டு இப்ப கிழக்கிற்கு புலிகள் போய் விட்டார்கள் என மாற்று கருத்துத் தோழர் சுட்டிக்காட்டுகிறாரா?

    புலி எப்பவும் கொல்ல வேண்டியவர்களை கொல்லுவதில்லை. யாரை தோற்கடிக்க வேண்டுமோ அவர்களை தோற்கடிப்பதில்லை. அவல் என நினைத்து முப்பது வருடகாலம் உரலைத்தான் இடித்துக் கொண்டிருந்தது. தமிழ் மக்களின் புற்று நோய் புலிகளே. அது அவர்களை துடைத்தெறியாமல் அடங்காது.

    Reply
  • palli
    palli

    //புலி எப்பவும் கொல்ல வேண்டியவர்களை கொல்லுவதில்லை.//
    யாரை கொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்??.

    Reply
  • ashroffali
    ashroffali

    //இன்று காலை மட்டக்களப்பு நகர்பகுதியில் இரு கிபீர் மிகையொலி விமானங்கள் வான்பறப்பினை மேற்கொண்டன//

    மாற்றுக்கருத்து தோழரே, இலங்கையின் யுத்த விமானங்கள் இலங்கை வான் பரப்பில் பறக்காமல் இந்தியாவின் மேலாகவா பறப்பது? கிபீர் விமானங்கள் கொழும்புக்கு மேலாகவும் தான் பறக்கின்றன. அப்படிப் பார்த்தால் கொழும்பை தாக்கியதாக அர்த்தம் கொள்ள முடியுமா? நேற்றைய தினம் மிகையொலி விமானங்கள் இரண்டும் அம்பாறை விமானத்தளத்தை நோக்கிப் பறப்பை மேற்கொண்ட சமயத்திலேயே மட்டக்களப்பை ஊடறுத்து பறந்திருந்தன. அதற்காக அதனை தாக்குதல் நோக்கத்தில் வந்ததாக அர்த்தப்படுத்தலாகாது. அது அபாண்டமானது.

    Reply
  • thampu
    thampu

    யாரை கொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்” பல்லி

    புலி வாகரையில் வேட்டையாடியது யாழ்ப்பாண வீதிகளில் எரித்துக் குவித்தது ஒப்பந்த காலத்தில் பேசுவதில் கவன்ம் செலுத்தாமல் தேடி தேடி சுட்டுக் கொன்றது எல்லாம் யாரை?

    இயக்கத்தில் இருந்த தன்னலமற்ற நேர்மையான பெடியன்களின் தியாகங்களால் கிடைத்த எல்லா நன்மைகளையும் மக்களுக்கு கிடைக்க விடாமல் தான் கப்பம் வாங்கவும் வெளிநாடுகளுக்கு போகவும் உல்லாசமாய் வாழவும் தான் பயன்படுத்தியுள்ளது.

    பேரம் பேசுதல் மூலம் உண்மையானவர்களை கொன்று விட்டு போராட்டத்தை பலவீனமாக்கிவிட்டுள்ளது. எங்கேயோ இருக்கிற எதிரியை விட்டு விட்டு தனக்கு அகப்படுகிற அப்பாவிகளிடம் வீரத்தை காட்டும். ஒரு காலத்தில் ரணில் புலியின் நண்பனாக இருந்தார். சந்திரிகாவும் இருந்தார். மகிந்தவும் இருந்தார்.

    Reply
  • santhanam
    santhanam

    உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன் யார் தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற ஆசைபட்டார்கலோ அவர்களை அழித்தார்கள். யார் தமிழ்மக்களின் சமுகசிதைவுக்கு காரணமானவர்களோ அவர்களுடன் கைகோர்த்து தமிழர்களின் அபிலாசைகளை அழித்து ஒருவிதமாயத்தில் வைத்து நடுரோட்டில் விட்டு விட்டு ஒடுகிறார்கள்

    Reply
  • அருட்செல்வன்
    அருட்செல்வன்

    விமானப்படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பு வான் பரப்பில் வான் பாதுகாப்பு ஒத்திகையொன்றை மேற்கொண்டனர்.

    நேற்று இரவு 7.30 மணி தொடக்கம் 8.45 மணிவரை இந்த ஒத்திகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.

    சிறிய விமானமொன்றை பறக்கவிட்டே இந்த ஒத்திகை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். வானத்தை நோக்கி ஒளி வெள்ளம் (சேர்ச் லைற்) பாய்ச்சப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஒத்திகையின் போது அதை அவதானித்த மக்கள் சற்று பதட்டமடைந்ததுடன் பின்னர் அது ஒத்திகை என்பதை அறிந்த பின்னர் ஆறுதலடைந்தனர்

    Reply
  • chandran.raja
    chandran.raja

    நான் ஆத்திரத்திலோ அறிவு கெட்டதனத்திலைலேயோ ஆதாய நோக்கிலேயோ கதைக்கவில்லை. பிரபாகரனுக்கு சிங்களவன் என்றவெறி உணர்வைத் தவிர வேறு ஒன்றுமே இருந்ததில்லை. மக்களைப்பற்றி அக்கறையோ அவர்களை முதலில் பாதுகாக்கபட வேண்டுமென்ற எண்னமே கிஞ்சித்தும் இருக்கவில்லை. தமிழ்மக்கள் எவ்வளவுக்ககு பாதிக்கப்படுகிறார்களே அதற்கேற்ப தன்இயக்கம் வளரும் என்ற சிடமூச்சித்தனமான கொள்கையுடையவன். இதை நம்புவதற்கு பலருக்கு சிரமாகயிருந்தாலும் அதுவே உண்மை.

    அகதிமுகாம் மருத்துவமனை கோவில்களில்லிருந்து தாக்குதல் தொடுத்தது பிரச்சாரத்தை எதிர்வினையாக முடுக்கிவிட்டதும். புலம்பெயர் பிரச்சார பீரங்கிகளின் முழக்கங்களும் இந்த வகைப்பட்டதே! ஒட்டுமொத்ததில் விடை? புலிகளும் பிரபாகரனரலும் தமிழ்மக்களை இந்திய இராணுவத்திற்கும் இலங்கை இராணுவதிற்கும் காட்டிக் கொடுக்கப்படதே…..

    Reply
  • மாற்றுகருத்துதோழர்
    மாற்றுகருத்துதோழர்

    வெற்றிக்கு பல பேர் பங்கெடுக்க வருவார்கள் தோல்வியில் சிலர்தான் பங்கெடுப்பார்கள். சிங்களத்தின் இன்றைய வெற்(று)றி கோசத்தில் மகிழ்சியாய் பங்கெடுக்கும் நண்பர்கள் சிங்களத்தின் நாளை தோல்வியில் பங்கெடுக்க வேணும். அந்த நேர்மையை இதே கருத்துகளத்தில் நானும் பார்க்கதான் போகிறேன்.

    Reply
  • santhanam
    santhanam

    ஒரு இனம் சிதைவடைகிறது என்கின்ற ஆதங்கம் தான் எனக்கு. எப்போது வெற்றி பெற்றோம் தோற்பதிற்கு.

    Reply
  • thampu
    thampu

    மாற்றுக்கருத்துதோழரே நீங்கள் புலியென்ற குறுகிய பார்வையில் சதாரண சினிமா ரசிகனின் மனோநிலையில் தமிழ் மக்களின் பிரச்சனையை பார்க்கிறீர்கள். தமிழ் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு புரிந்தது கூட உமக்கு புரியாத வகையில் பிரச்சனைகளைப் பார்க்கிறீர்கள்.

    இலங்கையில் தோற்றுப் போனது இலங்கை மக்களே.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    உலகத்தில்லுள்ள விடுதலை இயக்கங்கள் மக்களை பாதுகாத்தே போராடினார்கள். இயக்கத்தையும் தலைமையும் பாதுகாக்க ஊர்ஊரா மக்களை இழுத்து அலைக்கழிச்சு பலிகொடுத்த சம்பவம் எங்கேயாவது நீர் கேள்விப்பட்டது உண்டா? காதுகளை கூர்மையாகி மனத்தை மெதுமையாக்கி கேட்டு உணர்ந்து பாரும் அது எனதும் உமதும் தாய்நாட்டுமண் வன்னியில் நடந்துகொண்டிருக்கிறது தோழரே!!!
    முற்று முழுதான புலிகளின் அழிவில்லிருந்து தான் தாய்நாட்டு தமிழ்-மூஸ்லீம் மக்களின் நிம்மதி பெருமூச்சை காணமுடியும். இது தாரக மந்திரம் ஆகிவிட்டது.

    Reply
  • மாற்றுகருத்துதோழர்
    மாற்றுகருத்துதோழர்

    ரசியாமீது சுவீடிஸ் சக்கரவர்த்தி நெப்போலியன் ஹிட்டலர் படையெடுத்த போது ரசியா மன்னர்களும் சரி ஸ்ராலினும் சரி மக்களுடன்தான் மொஸ்கோ வரை பின் வாங்கினர். வியட்நாமிலும் அதுதான் நடந்தது சில போரட்ட வரலாறுகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.

    ஹோசிமின் படைகளின் இளம் தாதியாக பணியாற்றிய ஒரு பெண்ணின் வாக்குமூலம்.
    ‘அவர்கள் எங்களின் பூர்வீக கிராமங்களுக்குள் நுழைந்த போது நாங்கள் எங்கள் நெல் வயல்களை தீயிட்டுக் கொழுத்தினோம். எமது மக்கள் காலம் காலமாக குடிநீராக பயன்படுத்தி வந்த கிணறுகளில் எண்ணெய்களை எடுத்து ஊற்றினோம். அன்று எங்கள் கண்களில் வழிந்தது கண்ணீரல்ல ரத்தம். எதிரிகளின் கைகளின் சிக்கக் கூடாது என்பதற்காக எங்கள் பெண் குழந்தைகளை கொன்றிருக்கிறோம். முதியவர்களை எரிய விடப்பட்ட நெல்வயல் மீது வீசினோம். கடைசியில் அவர்கள் ஹனாயைக் கைப்பற்றி எங்கள் கிராமங்களுக்குள் நுழைந்த போது அவர்களுக்காக எதுவும் மிச்சமிருக்கவில்லை. கருகிய பயிர்களையும் மறிக்கப்பட்ட ஓடைகளையும் பயன்படுத்த முடியாத படி அவர்கள் விக்கித்து நின்ற போது நாங்கள் ஹனாயைக் கைப்பற்றினோம். பின்னர் எங்கள் பழைய நகரத்தை மீட்டெடுத்தோம்.”

    Reply
  • xxd
    xxd

    இங்கு ஒரு பகுதி புலியை ஆதரிக்க மறுபகுதி அரசை ஆதரிக்கின்றனர்.
    மக்களை ஆதரிப்பார்யார்??? எல்லோரும் அவர்கள் புதைகுழிகளில் மேல் இருந்து ஆட்சி செய்யவே துடிக்கின்றனர்.

    Reply
  • மாற்றுகருத்துதோழர்
    மாற்றுகருத்துதோழர்

    “புலியென்ற குறுகிய பார்வையில் சாதரண சினிமா ரசிகனின் மனோநிலையில் தமிழ் மக்களின் பிரச்சனையை பார்க்கிறீர்கள்”
    ஆமா 23 000 இளம் உயிர்களை மண்ணிற்கும் மக்களிற்காகவும் ஈகம் செய்த புலிகளின் போராட்டம் உங்களுக்கு குறுகிய பார்வையில் சாதரண சினிமாவாக தெரியலாம் .ஆனால் புலிகளும் மக்களும் சிந்திய குருதியும் தசைகளும் ஈழவிடுதலை ஒன்றின் மூலமே அதன் பெறுமதி நிவர்த்திக்கபடலாம் என்ற நம்பிக்கையில்தான் இன்றும் நான் மட்டுமல்ல உலகதமிழினமே புலிகளின் பின் நிற்கிறார்கள்.
    சிங்களத்தின் வெற்று கோசமே உங்களை மகிழ்விக்கும் போது உங்கள் மனநிலை என்னவென புரிகிறது.

    Reply
  • santhanam
    santhanam

    உலகதமிழினமே புலிகளின் பின் நிற்கிறார்கள்.வெற்று கோசமே உங்களை மகிழ்விக்கும் 23 000 இளம் உயிர்களை மண்ணிற்கும் மக்களிற்காகவும் ஈகம் செய்த புலிகளின் சமாதியில் குதிரைஒடுகிறார்கள் அவ்வளகவுதான்

    Reply
  • thampu
    thampu

    ஆமா 23 000 இளம் உயிர்களை மண்ணிற்கும் மக்களிற்காகவும் ஈகம் செய்த புலிகளின் போராட்டம் உங்களுக்கு குறுகிய பார்வையில் சாதரண சினிமாவாக தெரியலாம்”

    இன்னும் எத்தனை ஆயிரம் பேரை பலி கொடுக்கப் போகிறீர்கள்?

    Reply
  • palli
    palli

    தோழர் இந்த உமது 23000த்தில் புலியால் கொல்லபட்டவர்களும் அடக்கமா?? ஏன் மாத்தையா அடக்கமா?? உம்மை விட பல மடங்கு பக்குவபட்ட பலர் இருக்கிறார்கள். ஆகவே மல்லாக்க படுத்து துப்புவதை குறைப்பது நல்லது. பல போராட்டத்தை உதவிக்கு வலுகட்டாயமாக கூட்டி வருவது தெரிகிறது. அப்படியானால் எந்த போராட்டத்தில் தமிழர் நாட்டை விட்டு வெளியேறியது போல்(புலம்பெயர்) வெளியேறினார்கள் என சிறிது
    அவிட்டு விடலாமே. உமது வாதம் போல் நாமும் 1983ல் பலருடன் பல்லை காட்டினோம்.ஆனால் 26 வருடத்துக்கு பின் நிர் வந்து இதுதான் புது கவிதைஎன சொன்னால் நாம்மென்ன………..பல்லிக்கு வாயில வந்திட போகுது ஆமா.
    சாமத்து பல்லி.

    Reply
  • thramu
    thramu

    //ரசியாமீது சுவீடிஸ் சக்கரவர்த்தி நெப்போலியன் ஹிட்டலர் படையெடுத்த போது ரசியா மன்னர்களும் சரி ஸ்ராலினும் சரி மக்களுடன்தான் மொஸ்கோ வரை பின் வாங்கினர். வியட்நாமிலும் அதுதான் நடந்தது சில போரட்ட வரலாறுகளையும் தெரிந்து கொள்ளுங்கள். -மாற்றுகருத்துதோழர்//
    Are you compare Prapakaran with russian socialist struggle please do not jokes like this..

    Pirapakaran is a terrorist ans irts proved many years ago still some poeples (not known the world)think he will bring eelam – every thing willbe know very zoon -already london LTTE money collectors hid thier collection- LTTE top people have link to government its proved and they were killed in Mullaithivu- pirapakaran already made calls to his relatives to save him from Vanni- don’t you know.

    sad the peoples still thinging the SL army and the government are the enemy if these peoples see what happining in Jaffna now they feel sham of pirapakaran.

    prirapakans child in london studying our children die for his safety why this is one of the slogans in Meesalai last month.

    your leader (our terrorist) start to play with tamils life 125,000 because of cenima from tamil nadu and James bond film he said to DEVI magazine in 1984 dont you know – we will here soon.

    Reply
  • santhanam
    santhanam

    ருசியா, சுவீடன் மேற்குலகநாடுகள் எல்லாம் தாங்களே பசுமை புரட்சி செய்து தான் அடுத்து இயந்திரதுறையில் முன்னேறி நாடுகளுடன் யுத்தம் செய்தார்கள் நீங்கள் யுத்தம் செய்வது சொந்த இனத்திட்டை வலுக்கட்டாயமாக பறித்து சிங்களவனிட்டை பிச்சைவேண்டி யுத்தம் செய்தால் தமிழ்ஈழம் மண்பாணைதான்.

    Reply
  • accu
    accu

    சந்திரன்.ராஜா, உங்கள் ஆதங்கம் எல்லோருக்கும் நன்கு புரியும். ஆனால் சிலர் வேணுமென்றே கதைப்பார்கள் நாம் ஒன்றும் செய்ய முடியாது. அவர்களுக்கும் நிச்சயம் எல்லாம் தெரியும். சேடமிழுத்துக் கொண்டிருக்கிற புலி உயிரை விட்ட பின் தான் அவர்களும் கதைப்பதை நிறுத்துவார்கள். இப்படி அவர்கள் கதைப்பதற்கு சில காரணங்களும் உண்டு.

    மாற்றுகருத்துதோழரே புலிகளின் ஊடகங்களில் வரும் கட்டுரைகளை வாசித்து விட்டு வந்து இங்கு எழுதுவதை நிறுத்துங்கள். உலகப் போரட்ட வரலாறுகளை வாசித்தால் மட்டும் போதாது அதை விளங்கவும் வேணும். கிட்லர் ரசியாவின் மீது படை எடுக்கும் போது ஸ்ராலினுக்கு பயந்து ரஸ்யமக்கள் பேர்லினில் வந்து பெருந்தொகையாக இன்று கொழும்பில் தமிழர்கள் போல் குடியேறவில்லை. மற்றும் பனிப்போர் காலத்தில் நடந்த வியட்னாம் போரின் போது வியட்னாமுக்கு பின்பலமாக ரசியா என்ற வல்லரசு இருந்ததை தெரிந்துகொள்ளுங்கள். 31 வருடமாக களத்தில் புலிகள் நிற்பதாக சொல்லாதீர்கள். இந்தக்காலத்தில் நமது மக்கள் எந்தளவு இழி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியவில்லையா? வாராது. வந்த சந்தர்ப்பங்களை எல்லாம் புறம் தள்ளி மக்களைக் காக்கவென்று புறப்பட்டவர்கள் இன்று தம்மை காப்பதற்க்கு மக்களைப் பலி கொடுப்பது தெரியவில்லையா? வன்னியில் இருந்து வெளியேறும் மக்களை இராணுவம் மனிதக்கேடயமாக பாவிப்பதாக சொல்லாதீர்கள். தோழரே புலிகளினால் ஏதாவதொரு சிறிய அதிகாரத்துடனான தீர்வைப் பெற்று அதன் மூலம் போரை ஒழித்து நமது மக்களுக்கு நிம்மதியாக வாழ வளியேற்பட்டால் உங்கள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்பேன். நீங்கள்???

    Reply
  • மாற்றுகருத்துதோழர்
    மாற்றுகருத்துதோழர்

    எனது பின்னூட்டம் என்பது சந்திரன்.ராஜா கேட்ட “உலகத்தில்லுள்ள விடுதலை இயக்கங்கள் மக்களை பாதுகாத்தே போராடினார்கள். இயக்கத்தையும் தலைமையும் பாதுகாக்க ஊர்ஊரா மக்களை இழுத்து அலைக்கழிச்சு பலிகொடுத்த சம்பவம் எங்கேயாவது நீர் கேள்விப்பட்டது உண்டா?” இந்த கேள்விக்கானது.

    மற்றப்படி உங்கள் ஸ்ராலின் மீதுள்ள தனிப்பட்ட பார்வை. வியட்னாமுக்கு பின்பலமாக ரசியா என்ற வல்லரசு இருந்தத பின்புலத்திற்கும் சந்திரன்.ராஜா கேட்ட கேள்விக்கு பதிலான எனது பின்னூட்டத்திற்கும் என்ன சம்பந்தம். அதைவிட accu நான் எதை வாசிக்ககூடாதென்பதை நீங்கள் முடிவுபண்ணுவது எதில் அடக்கம்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    நீங்கள் எப்படித்தான் எதையும் சொல்லுங்கள் சூடுசுரணையே வரமறுக்கும்.

    Reply
  • palli
    palli

    //நீங்கள் முடிவுபண்ணுவது எதில் அடக்கம்//
    உங்க பொட்டம்மானின் செயல்முறை விளக்கத்தில் அடங்குமே. என்னும் ப்ல உலக புரட்ச்சி புத்தகங்களை இரவல் வாங்கி படியுங்கோ. அப்பதான் மற்றவர்களை கேனையன் ஆக்க வசதி. சிவராமுக்கு தெரியாத உலக புரட்ச்சிகளா?? ஆனால் எமது எனம் இப்படி சீரழிய ஒருசிலரே காரனம். அதில் சிவராமுக்கும் மிக முக்கிய பங்குஉண்டு.
    பல்லி.

    Reply