ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல், ஊடகவியலாளர் படுகொலை போன்றவை உட்பட அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மாபெரும் கண்டனக் கூட்டமொன்று இன்று திங்கட்கிழமை நுகேகொடையில் நடைபெறவிருக்கின்றது. ஜே.வி.பி.யின் ஏற்பாட்டில் நடைபெறும் இக்கண்டனக் கூட்டத்தில் பல்வேறு அமைப்புக்களின் தலைவர்களும், பிரமுகர்களும் உரையாற்றவிருப்பதாகவும் கூட்டம் மாலை 4 மணிக்கு நுகேகொடை ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள நகரசபை மைதானத்தில் நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.