வளரும் நாடுகளில் covid-19 தடுப்பூசி மருந்துகளை பெறவும் சிகிச்சைக்காகவும் உலகவங்கி 1200 கோடி டாலர் உதவி வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
உலக வங்கி சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளரும் நாடுகள் கோபிக்கு 19 தடுப்பூசி மருந்துகளை வாங்கவும் அதற்கான சிகிச்சைகளுக்கு செலவிடவும் இந்தத் தொகையை பயன்படுத்தலாம் எனவும் உலக வங்கி தனது அறிக்கையில் கூறியுள்ளது.
covid-19 தொடர்பான தேவைகளுக்காக வளரும் நாடுகளுக்கு ஜூன் 2021 ஆம் ஆண்டு வரை 160 பில்லியன் டாலர் உதவி வழங்க உலக வங்கி குழுமம் தீர்மானித்துள்ளது. அந்த 160 பில்லியன் டாலரில் இந்த 12 பில்லியன் டாலர் உதவியும் அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் நிர்வாக சபைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.