இலங்கை தமிழர் பிரச்சனையை திருமாவளவன் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரச்சனையாக்கிவிட்டார் – கருணாநிதி

karunanithi.jpgஇலங்கை தமிழர் பிரச்சனையை திருமாவளவன் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரச்சனையாக்கிவிட்டதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். ‘முரசொலி’ யில் அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

50 ஆண்டு கால வேதனை வரலாறு கொண்ட இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாட்டில் ஒட்டு மொத்தக் கருத்து என்றும், அதே நேரத்தில் தனித்தனி கட்சிகளின் அணுகுமுறை என்றும், பல்வேறு கோணங்களில் மக்களுக்கு திசைகள் அறிவிக்கப்பட்டு, அவர்களைத் திண்டாட்டத்திலும், திகைப்பிலும் தள்ளி விடப்படுகிற செயல்கள் பஞ்சமில்லாமலே நடைபெற்று வருகின்றன.

அனைத்துக் கட்சிகளை ஒருங்கிணைத்து அறவழியில் எத்தனை எழுச்சியைத் தமிழ் மக்கள் வாயிலாக உணர்த்த வேண்டுமோ, அந்த வழிகளில் எல்லாம் உணர்த்தி விட்டு, பிரதமரையே சந்தித்து, வெளியுறவுத் துறை அமைச்சர், இலங்கை சென்று முயற்சி மேற்கொள்வது என்ற திட்டத்துடன் இந்த அறப்போரில் ஒரு அத்தியாயம் முடிவுற்றது.

ஆனால் அந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படாததற்கான காரணங்களை முழுமையாக அறிந்து கொள்ளாத நிலையில், தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகளின் நடவடிக்கைகள் காரணமாக, இது ஏதோ இலங்கைத் தமிழரைப் பாதுகாக்கும் பிரச்சினை என்றில்லாமல், காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரச்சனை என்ற கோணத்தில் திருப்பி விடப்பட்டுள்ளது.

தேர்தல் கூட்டணி, வெற்றி தோல்வி, ஆட்சி மாற்றம் என்பன போன்ற அரசியல் கட்சி தத்துவப் பிரச்சனைகளில் இலங்கைத் தமிழர் பிரச்சனையையும் ஒரு சில தலைவர்கள் இணைத்துக் குழப்புவது, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பிரச்சினையை விட்டு, வெகு தொலைவு போய் விட்டதாகவே தெரிகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை சென்று வருவதற்கு இயலாத காரணம் எதுவும் இருந்தாலும் அதனையும் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கலாம். அல்லது எது தக்க காலம், நேரம் என்பதையாவது எடுத்துரைத்திருக்கலாம். அப்படியெதுவும் நடைபெறாதது, மாநில அரசைப் பொறுத்தவரையில் வேதனையான நிலையாக உணரக் கூடியதுதான்.

இப்போது வெளியுறவுத் துறைச் செயலாளர் இலங்கை சென்று ராஜபக்சேவை சந்தித்துப்பேசி விட்டு வந்துள்ளார். அதன் விபரங்களும் சரியாக வெளிவரவில்லை. ஒருவேளை பிறகு வரக்கூடும். கடந்த காலத்து ஜெயவர்த்தனே-ராஜீவ் ஒப்பந்தம் பரிசீலிக்கப்படலாம் என்பது போன்ற செய்திகள் உள்ளனவே தவிர, அது வரையில் போர் நிறுத்தம் என்று கூட அறிவிக்கப்படவில்லை. போர் சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் என்ற பெயரால் அப்பாவித் தமிழர்கள் அன்றாடம் அங்கே உயிர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஜெயவர்த்தனே-ராஜீவ் காந்தி உடன்பாடு பற்றிப் பேசி முடிக்கிற வரையில் போர் நிறுத்தப்படுகிற முயற்சியை மேற்கொள்வதில் பெரிய தவறு ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை.

அந்த ஒப்பந்தம் பற்றிய கருத்துக்களையும், உடன்பாடு பற்றிய எண்ணங்களையும், ஒப்புதலையும் இலங்கைத் தமிழர்கள் மீது இங்கிருந்து நாம் திணித்திட முனைவதில்லை என்ற நிபந்தனையுடன் அணுகுவதே ஆரோக்யமானது மட்டுமல்ல, அமைதி வழியும், அமைதி நிலையும் இலங்கையில் “மறு பிறவி” எடுப்பதற்கு ஏற்றதுமாகும். இது எப்படி உருவாகும், எப்படித் தீர்வாகும் என்ற வினாக்களுக்கு விடை கிடைப்பதற்கு முன்னர் இப்போது நம்மைப் பொறுத்தவரையில், நமது தமிழ் மாநில அரசைப் பொறுத்த வரையில் இதனை மையமாக வைத்து ஏதேனும் விஷப் பரிசோதனைகளில் இறங்கி இதனை வீழ்த்தி விட்டுத் தாங்கள் ஆட்சிக்கு வந்து விடலாமா என்றும் அவர்களோடு சேர்ந்து நாமும் பலன் பெற முடியுமா என்றும் சில மூளைகள் யோசனையில் ஈடுபட்டிருக்கின்றன.

அம்மையார் ஜெயலலிதாவின் அறிக்கைகளில் இந்த ஆண்டு முடிவதற்குள் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி மலரும் என்றும், சட்டமன்றத்துக்கும் எப்படியாவது தேர்தல் வரவழைக்க வேண்டும் என்பது தான் அவரது விருப்பம் என்றும், விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வருவதற்கும் அவர் எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருப்பதாக தனது தொண்டர்களுக்கு உறுதி அளிப்பது எதற்காக என்று எல்லோர்க்கும் புரியுமென நம்புகிறேன்.

மாநிலத்தில் இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை நீடித்திட வேண்டிய கழக ஆட்சியை, இது போன்ற பிரச்சினைகளில் வன்முறை அராஜகம் போன்ற கிளர்ச்சிகளை உசுப்பி விட்டு, கலைத்து விடலாம் என்று அவர் கருதுகிறார். அப்படிக் கலைத்தால் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக, நாம் மூன்றாவது முறையாக ஆட்சியை இழக்க நேரிடலாம்.

திட்டமிட்டு, இந்த அம்மையார் நடத்திட முனையும் `அரக்கு மாளிகை சதி’யை நாம் புரிந்து கொண்டு தானிருக்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக நாம் மீண்டும் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஜனவரி 12ம் நாள் என்னிடம் விவரித்து முடிவெடுக்க வேண்டுமென்று என் வீட்டுக்கு வந்த டாக்டர். ராமதாஸ், கி.வீரமணி, தொல். திருமாவளவன் ஆகிய மூவரும், `முதல்வர் எடுக்கிற முடிவை ஏற்று அவ்வாறு திட்டம் வகுப்போம்’ என்று தான் உறுதி அளித்தனர்.

உடனடியாக டெல்லியுடன் பேசுமாறு வேண்டினர். நானும் அன்று திருமங்கலம் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையைக் கூட கவனிக்க நேரமில்லை. அந்த மூவருடனும் அந்தச் சமயத்திலும் ஒரு மணி நேரம் என்கிற அளவுக்கு பேசி, அனுப்பி வைத்தேன்.

ஆனால் என்னைக் கலந்தே எதுவும் நடவடிக்கை என்று சென்றவர்கள், என்னைக் கலந்து பேசாமலே அந்த மூவரில் ஒருவர், நண்பர் தொல்.திருமாவளவன் தன்னிச்சையாக உண்ணாவிரதம் என அறிவிக்கப்பட்ட நிலையில், உண்ணாவிரதப் பந்தலில், சிங்கள அரசை விட இங்குள்ள காங்கிரஸ் கட்சியுடன் தான் தமக்குப் போராட்டம் என்பது போல விரிவுரைகள் ஆற்றிக் கொண்டிருந்தனர்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையின் உயிரோட்டத்தை எப்படி அங்கே போராளிகளுக்குள் நடந்த சகோதர யுத்தம் பலவீனப்படுத்தியதோ, அதைப் போலவே, இலங்கைத் தமிழர்களுக்காக வாதாடிடும் நமக்குள்ளேயும் `சகோதர யுத்தங்கள்’ எல்லாம் மொத்தப் பிரச்சினையை மூளியாக்கி விடுகிற கதை நடப்பதற்குத் தான் காரணமாகி வருகின்றன.

எப்படியோ, மூவர் கூடி முதல்வருடன் பேசினோமே, அடுத்த நாளே, இப்போது உண்ணா நோன்பு அறிவிக்கிறோமே என்று கூட எண்ணாது, அரசு பேருந்துகள் பல எரிக்கப்பட்டனவே இத் துணை அவசரத்துடன், இப்போது நிறுத்திக் கொண்டிருக்கிறோமே என்பதை சற்றுக் கூட சிந்திக்காமல் `இலங்கை தேசியக் கொடி எரிப்பு’ என்று திருமாவளவன் அறிவித்திருப்பது ஏன் என்று நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் அவருக்குப் புரிகிறதோ இல்லையோ, இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமென்று திட்டமிட்டு செயல்படுகிறவர்களுக்கு ஒன்று புரிகிறது.

தமிழ்நாட்டையே ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டத்தை கருணாநிதி நடத்த வேண்டும் என்பதையும், காங்கிரஸ் ஆட்சிக்கு இனி இங்கே இடமே இல்லை என்று சபதம் செய்வதையும், அப்படியொரு ஒட்டு மொத்தமான அராஜகப் புரட்சி மூலமாகவாவது, கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பி விட முடியாதா என்ற கவலை மிகுந்த ஆவலால் தானே தவிர வேறல்ல.

உடன் பிறப்பே கேரளத்து மாவலி மன்னனை வீழ்த்தியோர் கதையை மறந்து விட முடியுமா?

கருணாநிதி வீட்டுக்குப் போகவும் தயார், தமிழர்களின் ஒட்டுமொத்த நல் வாழ்வுக்காக காட்டுக்குப் போகவும் தயார். அது இலை தழை நிறைக் காடாகவும் இருக்கலாம், அல்லால் இடு காடாகவும் இருக்கலாம், எதுவாயினும் ஏற்பதில் எனக்கொரு மகிழ்ச்சியே! அதுவும் என் நாட்டுக்காக-நண்பர்களினால் கிடைத்தால், இரட்டிப்பு மகிழ்ச்சியே!

முதலில் மூவரும் கலந்து யோசிப்போம்-அதில் ஒரு முடிவெடுப்போம் என்பது பின்னர் தனித்தனியே முடிவெடுத்து அறிவித்து அதற்கேற்ப செயல்படுவது, என்னையே இறுதியாகப் பழி கூறத்திட்டமிடுவது நல்ல அரசியல் தந்திரங்களாக இருக்கலாம். அதற்கு நான் ஒருவன் மயங்கி பலிக்கடா ஆகத் தயாராக இருக்கலாம். ஆனால் அறிஞர் அண்ணா அவர்கள் வளர்த்து எம்மிடம் அளித்து விட்டுப் போன இந்த இயக்கத்தை ஆம், ஒரு கோடி உறுப்பினர் கொண்ட இந்த இயக்கத்தை பலியிட முனைவோருக்குத் துணை போக நான் தயாராக இல்லை. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

இலங்கைப் பிரச்னையில் கருணாநிதியுடன் சேர்ந்து திருமாவளவன் நாடகம்: ஜெயலலிதா

jayalalitha-1701.jpgஇலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர் திருமாவளவனும் சேர்ந்து நாடகமாடுவதாக அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் தற்போது நிலவும் முக்கியப் பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக முதல்வர் கருணாநிதியும் திருமாவளவனும் சேர்ந்து நடத்திய நாடகம்தான் உண்ணாவிரதப் போராட்டம்.இதனால்,இலங்கையில் போர் நிறுத்தமும் ஏற்படவில்லை இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு எந்தத் தீர்வும் காணப்படவில்லை. தமிழகத்தில் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுத்தியதும் தமிழகத்தில் உள்ள மக்களை அச்சுறுத்திக் காயப்படுத்தியதும்தான் இந்தப் போராட்டத்தின் பலன்கள்.

நான்கு நாள்களாக பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.உண்ணாவிரதப் போராட்டம் முடிந்த பிறகு, “தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும்” என்று காவல்துறை அறிவித்தது.இதிலிருந்தே இதற்குப் பின்னணியில் திமுக இருப்பது தெளிவாகியுள்ளது.

ஐந்து லட்சம் இலங்கைத் தமிழர்கள் மரணத்தின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும்போது,குடும்பத்துடன் மகிழ்ச்சியாக புத்தாண்டு கொண்டாடினார் முதல்வர் கருணாநிதி.இதுபோன்ற கண்துடைப்பு நாடகங்களைக் கண்டு தமிழக மக்கள் இனியும் ஏமாறக்கூடாது. இவ்வாறு ஜெயலலிதா தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகமே ஸ்தம்பித்துப் போகும் அளவுக்கு 10 நாட்களுக்கு போராட்டம் நடத்தப்படும் – டாக்டர் ராமதாஸ்

இலங் கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகமே ஸ்தம்பித்துப் போகும் அளவுக்கு 10 நாட்களுக்கு போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

நேற்று மாலை பழச்சாறு கொடுத்து திருமாவளவனின் உண்ணாவிரதப் போராட்டத்தை டாக்டர் ராமதாஸ் முடித்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்துக்கொள்ளும்படி, நான் நேற்று இதே மேடையில் கேட்டுக்கொண்டேன். அதற்கு திருமாவளவன், இன்று போய் நாளை வா என்று கூறிவிட்டார். ஆகையால் இன்று வந்து இருக்கிறேன். இன்று வெறுமனே போகமாட்டேன். பழச்சாறு கொடுத்து உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்து வைத்து விட்டுத்தான் செல்வேன்.

இலங்கை பிரச்சினை தொடர்பாக திருமாவளவன் மற்றும் அரசியல் கட்சிகளுடன் பேசி, அடுத்த கட்ட போராட்டம் தொடர்பாக நல்ல முடிவை எடுப்போம். அடுத்த கட்ட போராட்டம் என்பது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் நடக்க வேண்டும். உலகையே உலுக்க வேண்டும்:

இந்த போராட்டத்தால் தமிழகமே செயலிழக்க வேண்டும். பேருந்து, தொடருந்து எதுவும் ஓடக்கூடாது. மருந்து, பால் விநியோகம் மட்டுமே நடக்க வேண்டும். இந்த போராட்டம் உலகையே உலுக்க வேண்டும். இதை பார்த்துவிட்டு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்.

இது எனது தனிப்பட்ட முடிவு. திருமாவளவனுக்கு கூட நான் இப்படி ஒரு போராட்டத்தை கூறுவேன் என்பது தெரியாது. இதைவிட வேறு விதமான நல்ல போராட்டத்தை முதலமைச்சர் கூறினால், இதனை விட்டு விட்டு, முதல்வர் கூறும்படி போராட்டம் நடத்தலாம். முதல்வரை முன்நிறுத்தி, அவரது வழிகாட்டுதலின் பேரில் ஒரு நல்ல போராட்ட முடிவை எடுக்க வேண்டும்.

தமிழக முதல்வர், கோட்டை மற்றும் அறிவாலயத்தில் கூட்டம் போடாமல், பொதுவான இடத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் போட்டு, அதில் நாங்கள் முன்மொழிய, மற்ற கட்சிகள் வழி மொழிய செய்தால் சிறப்பாக இருக்கும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 Comments

  • மாற்றுகருத்துதோழர்
    மாற்றுகருத்துதோழர்

    எப்போ ஈழத்தமிழர் பிரச்சினையை ஏதோ உணவு நிவாரணமாகவும் பிரணாப் முகர்ஜீயின் கொழும்பு பயணமாகவும் காட்ட முயற்சித்தாரோ அன்றே புரிந்து விட்டது உண்மையான பிரச்சினையை திசைதிருப்பும் தந்திரம்.கருணாநிதிக்கு காங்கிரசின் தேர்தல்கூட்டு அமைச்சர்பதவிபெறல் போன்ற உறவுதான் தேவையே தவிர ஈழத்தமிழர் உயிர்காப்பில்லை. பிரணாப் முகர்ஜீயுடன் தனிமையில் பேசி அவருக்கு ஜால்ரா போடும் விதமாக அறிக்கை விட்ட போதே ஒற்றுமை திட்டமிட்டு கருணாநிதியால் சிதறடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கருணாநிதி சொல்லும் ஒற்றுமை முதலைகண்ணீர் மட்டுமே.
    “இலங்கைத் தமிழர் பிரச்சனையின் உயிரோட்டத்தை எப்படி அங்கே போராளிகளுக்குள் நடந்த சகோதர யுத்தம் பலவீனப்படுத்தியதோ…..”
    1986ல் புலிகளுடன் மோதியவர்களில் புளொட் தவிர்ந்த ரெலோ ஈபீஆர்எல்எப் கூட்டணி ஈரோஸ் தமிழ்காங்கிரஸ் என புலிகளுடன் ஒற்றுமைபட்டு நிற்கும் தற்போதைய யதார்த்தை மறுத்து 22 வருடங்களிற்கு முற்பட்ட பழங்கதை பேசுவதிலிருந்து இவருக்கு ஈழத்தமிழர் உயிர்பற்றி அக்கறையில்லை தமிழகத்தில் காங்கிரஸை காப்பாற்றுவதுடன் தமிழர்களிற்கிடையிலான ஒற்றுமையை குழப்பி சோனியாவின் ஈழத்தமிழர் அழிப்பு நிகழ்சி நிரலுக்கு ஒத்துழைப்பதுதான் ஒரே நோக்கம்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    1/ தமிழ்நாட்டு தேர்தல்பிரச்சாரம் வழக்கத்திற்கு மாறாக சற்றுமுன்னதாகவே சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. இன்னும் ஒரு மாதத்திற்குள்ளாக களைகட்டிநிற்கும். (ஈழத்துப்பிரச்சனை அல்ல)

    2/ பழையகதைகள் தான் நாளையவாழ்வுக்கு புதுகதைகளாக மாறி மக்களின் வாழ்வை மலரவைக்கின்றன். இதை வரலாற்று அனுபவம் என்றும் சொல்வார்கள் தோழரே!.

    Reply
  • Thaksan
    Thaksan

    மாற்றுக்கருத்து தோழர் எந்த உலகத்தில் இருந்து பின்னூட்டம் விடுகிறாரோ தெரியவில்லை. புலிகளால் தடைசெய்து படுகொலை செய்யப்பட்ட தமிழ்ப்போராளிகளின் எண்ணிக்கை இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு அதிகம் என்பது இங்குள்ளவர்களுக்கு தெரியும். ஏதோ புளொட் மட்டும் தான் தனித்து இருப்பதாக வக்காலத்து வாங்குகிறார். டெலோ> ஈபிஆர்எல்எவ் ஈபிடிபி அமைப்பினர் எல்லாம் இங்கு யாழ்> வவுனியா> மட்டக்களப்பு> திருகோணமலையில் காரியாலயம் அமைத்து மக்கள் பிரதிநிதிகளாகவும் செயற்படுவது தெரியவில்லையா? புலி மாதிரித்தான் அவையளும்; கப்பம் வாங்குவதில் எல்லாருக்கும் வலு ஒற்றுமை ஒண்டு இருக்குது…

    Reply
  • Para
    Para

    Dear Friends, What is this Alternative thinker and his ideology ?.There are only two way of thinking one is pro people and other one is Anti people Or we can predict it is in another form pro Prolatariot or pro capitalist/revisionist and imperialists. We never heard of the so called Alternative Thinking. Who are interduced it ? Is it Marxs or Engel or Stalin or Mao or Com.Trotsky .These gentlemen never ever talked about the so called theory of Alternative. Then the next question is ,will you accept the anihilation of all the tamil groups and democratic and trade union people like Com.Annamalai and com.Vijananthan and other poor carders who are belong to the political movements By the LTTE?. Do you know that one of the TELO carder was killed and burnt alive in the Thirunelveli Junction in Jaffna.The same was happened in Tellipallai junction. Is it easily forget without remembering the past and present attrocities of the Fascist LTTE.To you it is an old story. Is it so ?

    Reply
  • மாற்றுகருத்துதோழர்
    மாற்றுகருத்துதோழர்

    இன்றை தமிழகஎழுச்சியின் பின் ஊக்க உந்து சக்தியாக இருப்பவர் ரெலோ தலைவர்களில் ஒருவரான திரு சிவாஜிலிங்கம்……….

    Reply
  • ashroffali
    ashroffali

    //1986ல் புலிகளுடன் மோதியவர்களில் புளொட் தவிர்ந்த ரெலோ ஈபீஆர்எல்எப் கூட்டணி ஈரோஸ் தமிழ்காங்கிரஸ் என புலிகளுடன் ஒற்றுமைபட்டு நிற்கும் தற்போதைய யதார்த்தை //
    //இன்றை தமிழகஎழுச்சியின் பின் ஊக்க உந்து சக்தியாக இருப்பவர் ரெலோ தலைவர்களில் ஒருவரான திரு சிவாஜிலிங்கம்……….//

    ரெலோ பாரிய இயக்கமாக செயற்பட்ட காலத்தில் சிவாஜிலிங்கம் இரண்டாம் நிலை தலைவர்கள் மட்டத்தில் கூட இருக்காதவர். அவர் இன்றைக்கு ரெலோவின் பெயரை விற்று பதவி பெற்றதற்காக ஒட்டு மொத்த ரெலோவும் அவருக்குப் பின்னால் என்றோ அல்லது புலிகளை ஆதரிப்பதாகவோ நீங்கள் கருத முடியாது.மேலும் இன்றைக்கு ரெலோவின் இன்னொரு பிரிவு தனியாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.

    ஈ.பீ.ஆர்.எல்.எப். என்றாலே எல்லோருடைய நினைவிலும் உடன் வருபவர் வரதராஜப் பெருமாள் தான். சுரேஷ் பிரேமச்சந்திரன் எல்லாம் பின்னால் வந்தவர்கள் மட்டுமன்றி தங்களைத் தாங்களாகவே தலைவர்களாக அழைத்துக் கொண்டவர்கள். பதவியாசை கருதி அவர்கள் சோரம் போனாலும் உண்மையான ஈ.பீ.ஆர்.எல்.எப். இன்றைக்கும் வரதராஜப் பெருமாள் மற்றும் சிறீதரன் தலைமையில் செயற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. அந்த உண்மையை மறைக்க உங்களால் முடியுமா? ஆனால் பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடுவதில்லை.

    Reply
  • அருட்செல்வன்
    அருட்செல்வன்

    இலங்கை அரசுக்கு இராணுவ ரீதியிலான உதவிகள் எதையும் இந்தியா செய்யவில்லை. பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளே ஆயுத உதவிகள் செய்கின்றன. இதுகுறித்து, இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் கருத்துத் தெரிவிக்காமல் மத்திய அரசுக்கு எதிராகப் பேசி வருகிறார்கள். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அனைத்து வழிகளிலும் மத்திய அரசு உதவி வருகிறது’ என்றார் தங்கபாலு.

    Reply
  • Danu
    Danu

    22 வருடங்களுக்கு முன்பு புலிகளால் துரோகிப் பட்டம் சூட்டப்பட்டு அழிக்க முற்பட்ட ரெலோ இயக்கம்தான் இன்றைக்கு தமிழரின் குரலாக பாவிக்க வேண்டிய நிலையில் புலிகள் உள்ளார்கள். புலிகளின் அழிப்பின் பின் அரசாங்கம் கொடுக்கும் எந்த தீர்வையும் ஏற்றுக் கொண்டு நாளை தமிழரின் பிரதிநிதியாக ரெலோ வலம்வரும் சாத்தியக்கூறுதான் தென்படுகிறது. மொத்தத்தில் இந்தியாவின் ஆரம்ப கால திட்டமே அமுல்ப்படுத்தப் படவுள்ளது போலுள்ளது.

    Reply
  • மாற்றுகருத்துதோழர்
    மாற்றுகருத்துதோழர்

    “அந்த உண்மையை மறைக்க உங்களால் முடியுமா? ”
    எது உண்மையென்று சொல்ல வேண்டியவர்கள் ஈழத்தமிழர்கள் அதிலும் குறிப்பாக ரெலோ ஈபீஆர்எல்எப் உறுப்பினர்கள்.

    Reply
  • palli
    palli

    // புளொட் தவிர்ந்த ரெலோ ஈபீஆரெலெப் கூட்டணி ஈரோஸ் தமிழ்காங்கிரஸ் என புலிகளுடன் ஒற்றுமைபட்டு நிற்கும் தற்போதைய யதார்த்தை மறுத்து //
    இது என்ன கதை மாறுகிறது.?.. தோழரே சிலர் வலோக்காரமாக தாம் விரும்பிய பெண்ணை (பலத்தாலோ அல்லது பண்ணதாலோ) திருமணம் செய்வார்கள். அந்த பெண்ணும் அவர்களுடன் குடும்பம் நடத்தும். அதுக்காக அதை போய் வாழ்க்கை என சொல்லமுடியுமா.?? அதுபோல்தான்
    எதோ பிழைப்புக்காக சிவாஜிலிங்கம் பிரேமசந்திரன் போன்றோர் அங்கு வாழ்வதால் அதைபோய்.. இதுகூட புரியாம என்னத்தை சொல்ல..
    பல்லி.

    Reply
  • kanapathi
    kanapathi

    கேளுங்கள் பிரேமச்சந்திரனிடம் தங்களுடன் எத்தனை பேர் உள்ளார்கள் என்று (இலங்கை பாதுகாப்பு பொலிசார் தவிர்த்து)…… இவர்கள் ஈபிஆர்எல்எவ்…..!
    கேளுங்கள் சிவாஜிலிங்கத்திடம் தங்களுடன் தங்களுடன் எத்தனை பேர் உள்ளார்கள் என்று (இலங்கை பாதுகாப்பு பொலிசார் தவிர்த்து)…… இவர்கள் ரெலோ…..!
    அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தெரியும் இவர்கள் வண்டவாளங்கள். இவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஆனால் இருப்பதோ இந்தியாவில். தங்கள் குடும்பசகிதம் இந்தியாவில் இருந்து சுகபோகம் அனுபவிக்கும் இவர்கள் தமிழ் மக்களைப் பற்றி எங்கே சிந்திக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளை உயர்கல்வி கற்பிப்பதிலும் தங்கள் குடும்பத்திரை வரவழைத்து மருத்துவ உதவிகள் – சுற்றுலா தலங்கள் செல்வதிலும் உள்ள நாட்டம் தமிழ் மக்கள் பற்றிய அவர்களின் கவலை சொல்லி மாளாது இவர்களை விட்டுவிட்டு வேறு ஏதாவது வேலை இருந்தால் பாருங்கள்

    Reply