“ரிஷாத்தைக் கைது அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் என்று எதிரணியினர் கூக்குரல் இடுவதைப் பார்க்கும்போது சிரிப்பாக உள்ளது” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆளுந்தரப்பின் முக்கியஸ்தர்களுடன் நடத்திய கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார் .
அங்கு மேலும் குறிப்பிட்ட அவர்.,
ரிஷாத் பதியுதீன் மீது தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டும், அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது. அதையடுத்தே அவரைக் கைதுசெய்யுமாறு காவல்துறையினருக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
அதற்கமைய ரிஷாத்தைக் கைதுசெய்யப் காவல்துறையினர் விரைந்தபோது அவர் ஓடி மறைந்துள்ளார். அவரைத் தேடும் பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்கின்றன. ரிஷாத்தைக் கைது செய்யும் நடவடிக்கைக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் என்று எதிரணியினர் கூக்குரல் இடுவதைப் பார்க்கும்போது சிரிப்பாக இருக்கின்றது.
ரிஷாத் விவகாரம் நீதித்துறை சம்பந்தப்பட்ட்து. இதில் எவரும் தலையிட முடியாது. ரிஷாத் குற்றவாளியா? இல்லையா? என்பதை நீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும். அது தொடர்பில் நாம் தீர்மானிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஸாட்பதியூதீன் கைது செய்ய பிறப்பிக்கப்பட்டுள்ள ஆணையானது திட்டமிட்ட அரசியல்பழிவாங்கல் எனவும் அதனை அரசு உடனே நிறுத்த வேண்டும் எனவும் சஜித்பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய விசனத்தையும் அதிருப்தியையும் வெளியிட்டுவருகின்ற நிலையில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளமை நோக்கத்தக்கது.