புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் நேற்று(17.10.2020) மாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் குறித்த முதியவரின் வீட்டுக்கு சென்ற மர்மக் கும்பல் இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
பலத்த காயத்திற்குள்ளன 62 வயது மதிக்கத்தக்க முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்மைய நாட்களில் வடக்கில் வாள்வெட்டுச்சம்பவங்கள் அதிகரித்து வருவதுடன் பலர் இதன் போது தாக்கப்படுவதையும் காணக்கூடியதாகவுள்ளது. பொலிஸார் பலரை கைது செய்து இதனை கட்டுப்படுத்த முயன்றுகொண்டிருக்கின்ற போதிலும் கூட இதனுடைய தீவிரத்தன்னை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றதே தவிர ஓய்ந்தபாடில்லை என்பதே வருத்தத்துக்குறிய உண்மையாகும். மேலும் இதே வாள்வெட்டுக்கலாச்சாரம் தொடருமாயின் எதிர்காலத்து தலைமுறையினுடைய வாழ்க்கை அம்சங்களும் பாதிக்கப்பட்டு விடும் என்பதே உண்மை..!
இது தொடர்பாக ஒவ்வொருவரும் சமூகப்பொறுப்பு உடையவர்களாக இருக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.