மேற்கிந்தியதீவுகள் கிரிக்கெட் அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரரான வெயின் பிராவோ ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுபவர். இந்த அணியின் வெற்றிக்கு இவரது பங்களிப்பும் முக்கியமானது.
ஐ.பி.எல் 2020 சீசன் தொடங்கும்போது காயத்தால் சில போட்டிகளில் அவர் விளையாடவில்லை. அதன்பின் அணியில் இடம்பிடித்து விளையாடினார். தன்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராகி வந்த நேரத்தில் டெல்லி அணிக்கெதிராக விளையாடும்போது காயம் ஏற்பட்டது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக விளையாடவில்லை.
இந்நிலையில் எஞ்சிய போட்டிகளில் இருந்தும் பிராவோ விலகியுள்ளார். மேலும், இன்னும் ஒன்றிரண்டு நாட்களுக்குள் சொந்த நாடு திரும்புவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் இன்னும் நான்கு போட்டிகளிலும் விளையாட உள்ளது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.