வடக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்த அடைந்த முன்னேற்றத்தை உலகிற்கு தெரியப்படுத்துங்கள். இராஜதந்திர பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி ராஜபக்ஷ

president.jpgவடக்கில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் மீளக் கட்டியெழுப்புவதில் நாம் அடைந்து வரும் முன்னேற்றத்தை உலகிற்கு நீங்கள் அறிவிக்க வேண்டிய தருணம் இதுவென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் இராஜதந்திர பிரதிநிதிகளுடனான விஷேட கூட்டமொன்றும் விஷேட செயலமர்வும் திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

வெளிவிவகார அமைச்சு ஏற்பாடு செய்திருந்த இந்த விஷேட செயலமர்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய ஜனாதிபதி ராஜபக்ஷ, வடக்கிலுள்ள அப்பாவித் தமிழ் மக்களின் நிலைமை தொடர்பாக தெரிவிக்கப்படும் தவறான தகவல்களுடனான குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் உலகத்துக்குத் தெரிவிக்க வேண்டிய காலம் இதுவெனவும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது;

வடக்கிலுள்ள தமிழ் மக்களின் துன்பங்கள் புலிகளால் ஏற்படுத்தப்பட்டவையாகும். அவர்கள் தமிழ் மக்களை விடுவிப்பவர்கள் என்று தவறுதலாக உரிமை கோருகின்றனர்.  ஆனால், அவர்கள் உண்மையில் தமிழ் மக்களின் அடக்குமுறையாளர்களாகும். நீங்கள் பிரதிநிதித்துவம் வகிக்கும் நாடுகளிலுள்ள மக்கள் தமிழர்கள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படுகின்றனர் என்பதை தெரிந்து கொள்வது அவசியம். இலங்கைப் படையினர் மனிதாபிமான படையினராக விடுதலைக்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். வடக்கு இலங்கை விடுதலை, அபிவிருத்தி என்பவற்றின் புதிய வசந்தத்தின் உதயத்திற்காக காத்திருக்கின்றது என்பதை உங்கள் மூலம் உலகம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

உலகின் தற்போதைய பொருளாதர நெருக்கடிக்கு மத்தியிலும் எமது பொருளாதாரம் சிறப்பான முறையில் ஈடுகொடுத்து வருகிறது. அங்கவீனர்கள், அநாதைகள், முதியவர்கள், வறியவர்களென சமூகத்தின் நலிந்த வர்க்கத்தினரின் பாதுகாப்பு நலனோன்பு நடவடிக்கைகளில் நாம் கவனம் செலுத்துகின்றோம். எமது பொருளாதார வளர்ச்சியில் தனியார் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கு நாம் ஊக்குவிப்பு அளித்து வருகின்றோம். அத்துடன், தனியார் துறைக்கும் அரச சேவைகளுக்கும் இடையில் ஆரோக்கியமான பொருளாதார, சமூக உறவுகளை கட்டியெழுப்ப நாம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியென்ற ரீதியில் எமது மண்ணில் இருந்து பயங்கரவாதத்தை ஒழித்து மக்களைப் பாதுகாப்பதற்குரிய உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர வேறு தேர்வு இல்லை. பயங்கரவாதத்தை தோற்கடிப்பதன் மூலம் எமது நாட்டிலுள்ள சமூகங்கள் பேச்சுவார்த்தையிலீடு படுவதற்கான வழிகள் திறந்து விடப்படும். இதனால், பயமோ அச்சுறுத்தலோ இல்லாமல் தமது துன்பங்களுக்கு நியாய பூர்வமான தீர்வை கண்டு கொள்வதற்கான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க முடியும். இதன் மூலம் நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜையும் கௌரவத்துடன் வாழ்வதற்கான சமாதானம் ஏற்படும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • palli
    palli

    தோழரையும் சங்கரியர் இருவரையையும் புது உடுப்பு போட்டு ஒருவிதமான புன்னகையுடன் அரச செலவில் ஒருமுறை வலம் வந்தால் வடக்கின் ஜனனாயகம் உலகுக்கு இலகுவாக தெரிந்துடுமே. இதுக்கு ஏன் ராஜதந்திரங்கள்.
    பல்லி.

    Reply
  • santhanam
    santhanam

    நாங்களும் சமாதானமேடையில் கபிலா கொங்கோ நாட்டு புரட்சிவீரனின் உடையல்லோ போட்டவர் தேசியதலைவர் மறதி ஒருவிதமான புன்னகையுடன்.

    Reply