கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதியிலுள்ள விஷ்வமடு ஆஸ்பத்திரியில் 285 பிள்ளைகள் பிறந்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் கஹந்த லியனகே தெரிவித்தார்.
இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு உரிய வசதிகளை அரசு வழங்கி வருவதோடு மருத்துவர்கள், தாதிமார்கள் போன்றோரையும் சேவையில் ஈடுபடுத்தியுள்ளோம்.
அங்கு சிறந்த சுகாதார சேவைகள் நடைபெறுவதாலேயே கடந்த மாதத்தில் அங்கு 285 பிரசவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் போஷாக்கு வசதிகள் அளிப்பதற்கான திரிபோஷா அடங்கலான போஷாக்கு உணவுகள் அனுப்பப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.