‘கட்டுப்பாடற்ற பகுதிகளில் உணவு மற்றும் மருந்துத் தட்டுப்பாடு எதுவும் கிடையாது. அப்பகுதிக்குத் தேவையான உணவுப் பொருட்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருவதாக மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார். வன்னி மனிதாபிமான நடவடிக்கை குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அமைச்சில் நடைபெற்றது.
அமைச்சர் மேலும் கூறியதாவது:- மோதல்கள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள போதும் மோதல் நடைபெறும். பகுதிகளுக்கு உணவு வழங்கும் நடவடிக்கை தடையின்றி முன்னெடுக்கப்படுகிறது. கடந்த 16ஆம் திகதி 58 லொறிகளில் 820 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டன. மேலும் ஒரு தொகுதி உணவுப் பொருட்களை அடுத்த வாரம் அங்கு அனுப்பவுள்ளோம்.
வன்னியில் உணவுத் தட்டுப்பாடு கிடையாது. அங்குள்ள தேவைகளுக்கு ஏற்ப உணவு அனுப்பப்படுகிறது.