ஐ.பி.எல் தொடரில் இன்றைய மாலை நேர ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில் வென்ற பெங்களூர் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்திருந்தாலும் கூட எதிர்பார்த்த அளவிலான ஓட்டத்தை பெற முடியவில்லை. மிக மந்தகதியிலேயே அணியின் ஓட்டம் நகர்ந்தது. சென்னை பந்துவீச்சாளர்கள் பெங்களுர் வீரர்களை நன்கு கட்டுப்படுத்தினர். இறுதியில் 20 பந்துப்பரிமாற்ற முடிவில் பெங்களூர் 6 இலக்குகள் இழப்பிற்கு இழப்பிற்கு 145 ஓட்டங்களையே பெற்றது. அணிசார்பாக நிதான ஆட்டத்தை பெளிப்படுத்திய தலைவர் விராட் கோலி 43 பந்தில் 50 ஓட்டங்களை பெற்றமையே அணியின் அதிகபட்ச ஓட்டமாக அமைந்தது.
சென்னை அணி சார்பில் சாம் கர்ரன் 3 இலக்குகளையும், தீபக் சாஹர் 2 இலக்குகளையும் வீழ்த்தினர்.
பின்னர் 146 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிசிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடகத்தில் இருந்தே அதிரடியாக விளையாடத் தொடங்கினர். சென்னை அணி 5.1 ஓவரில் 46 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது டு பிளிஸ்சிஸ் 13 பந்தில் தலா இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகளுடன் 25 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
அடுத்து ருத்துராஜ் கெய்க்வாட் உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடியாக விளையாடியது. அம்பதி ராயுடு 27 பந்தில் 39 ஓட்டங்கள் எடுத்து ஆட்மிழந்தார். தொடர்ந்து கெய்க்வாட்டுடன் தலைவர் டோனி ஜோடிசேர்ந்தார். சிறப்பாக ஆடிய ருத்துராஜ் கெய்க்வாட் 42 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி அணியை 18.4 பந்துப்பரிமாற்றத்தில் வெற்றிக்கு அழைத்துச் சென்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் 18.4 பந்துப்பரிமாற்றத்தில் 2 இலக்கு இழப்பிற்கு 150 ஒட்டங்கள் எடுத்து 8 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தோல்வியால் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்யும் வாய்ப்பு தள்ளிப் போகியுள்ளது.