முல் லைத்தீவில் புலிகளால் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் இடம்பெயர்வதற்கான பாதுகாப்பு வலயங்களை இராணுவம் பிரகடனப்படுத்தியுள்ளது.
புதுக்குடியிருப்பு, இரணைப்பாளை, ஆனந்தபுரம், வலைஞர்மடம், அம்பலவன்பொக்கனை, மாத்தளன், முள்ளிவாய்க்கால், வள்ளிபுனம், தேவிபுரம், மூங்கிலாறு, உடையார் கட்டு, சுகந்திரபுரம், கைவேலி, ரெட்பானா கிராமம் ஆகிய இடங்களில் தற்போது ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ளனர். குறித்த மக்கள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தும் நோக்கில் புலிகளால் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பிரதேசங்களை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் இவர்களை தேவிபுரம், உடையார்கட்டு, சுகந்திரபுரம், சுகந்திரபுரம் கொலனி, சுகந்திரபுரம் மத்தி, கைவேலி வடக்கு, இருட்டு மடு போன்ற இடங்களுக்கு செல்லுமாறும் இந்த இடங்கள் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு அறிவித்துள்ளது.
குறித்த பிரதேசங்கள் யுத்த சூனியப் பிரதேசமாகவும் இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பிரதேசங்களை நோக்கி மக்கள் இடம்பெயர்வதன் மூலம் யுத்தத்தின் தாக்கங்களிலிருந்து விடுபட்டுக்கொள்ள முடியுமாக இருக்கும். ஆயினும் புலிகள் தங்களால் மனிதக் கேடயங்களாக குறித்த மக்களை பயன்படுத்தி வரும் நிலையில் அவர்கள் இடம்பெயர அனுமதிப்பார்களா என்பதே கேள்விக்குறியாகும். முல்லைத்தீவு பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டு இடம்பெயர்ந்த மக்களை குறித்த வலயங்களுக்கு செல்லுமாறு படைத்தரப்பு அறிவித்துள்ளது
padamman
தாமதிக்காமல் மக்கள் வெளியேறவேண்டும் புலிகள் உண்மையில் மக்களுக்காய் போரடியிருந்தால் மக்கள் வெளியேற அனுமதிக்க வேண்டும் மக்கள்தான் புலிகள் புலிகள்தான் மக்கள் என்று சொல்லிக் கொன்றிந்தால் எல்லோரும் மண்னுக்ககுள்தான் போக வேண்டும்.
மாற்றுகருத்துதோழர்
1987ல் ஒப்பிரேசன் லிபரேசன் காலத்திலும் இப்படிதான் அந்த கோவில் இந்த பாடசாலையில் தமிழர்களை இடம்பெயர்ந்து இருக்கசொல்லி பலாலி வானொலி மூலம் அறிவித்து விட்டு அந்த இடங்களை குறி வைத்து சிங்களப்படை விமான எறிகணை தாக்குதல் நடத்தி தமிழர்களை கொத்து கொத்தாக பலியெடுத்ததை தமிழர்கள் மறக்கவில்லை.
” குறித்த மக்கள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தும் நோக்கில் புலிகளால் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.”
எப்படி! வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை சிறப்பு தடுப்பு முகாம்களில் தடுத்து வைத்து சிங்கள படை மனிதகேடயங்களாக பாவிப்பது போலவா!
palli
//மனிதகேடயங்களாக பாவிப்பது போலவா!//
இல்லை குழந்தைகளை கரும்புலியாக பாவிப்பது போல்.
மாற்றுகருத்துதோழர்
வியாழக்கிழமை, 22 சனவரி 2009,–வன்னி மக்கள் பாதுகாப்பாய் போய் ஒதுங்குவதற்கென சிறிலங்கா அரசாங்கம் நேற்று அறிவித்த “புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயம்” மீது இன்று வியாழக்கிழமை சிறிலங்கா படைகள் நடாத்திய நடத்திய அகோர எறிகணைத் தாக்குதலில் 12 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.
ashroffali
மாற்றுக்கருத்துதோழரே //சிறிலங்கா அரசாங்கம் நேற்று அறிவித்த “புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயம்” மீது//
அரசாங்கம் எப்போது புதுக்குடியிருப்பை பாதுகாப்பு வலயமாக அறிவித்தது? செய்தியைக் கொஞ்சம் கவனமாக வாசித்துப் பாரும்.
//இந்த நிலையில் இவர்களை தேவிபுரம் உடையார்கட்டு சுகந்திரபுரம் சுகந்திரபுரம் கொலனி சுகந்திரபுரம் மத்தி கைவேலி வடக்கு இருட்டு மடு போன்ற இடங்களுக்கு செல்லுமாறும் இந்த இடங்கள் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு அறிவித்துள்ளது.//
மாற்றுக்கருத்து என்ற பெயரில் வந்தால் எதையும் எழுதலாம் என்பதல்ல.
மாற்றுகருத்துதோழர்
“அரசாங்கம் எப்போது புதுக்குடியிருப்பை பாதுகாப்பு வலயமாக அறிவித்தது? செய்தியைக் கொஞ்சம் கவனமாக வாசித்துப் பாரும்.”
லங்காபுவத் சொல்லும் செய்தியை கேட்கவேண்டிய நிலை சிங்களபடையின் பிடியிலுள்ள மக்களுக்கு இருக்கலாம். புலம்பெயர் ஈழத்தமிழருக்கு அவ் அவலநிலையில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவ் வைத்தியசாலை வைத்தியர் தந்த செவ்வியை (அவலசெய்தியை) பிபிசீ தமிழில் (22.1.09)கேட்டேன். முல்லைதீவு வைத்தியசாலை தற்போது இயங்கும் வள்ளிபுனம் பாடசாலையும் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையும் முல்லைமாவட்ட அரசஅதிபர் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் சிறிலங்கா அரசு அறிவித்த பாதுகாப்பு வலயத்தில் அடங்குவதாக அளித்த உறுதியின் பிரகாரமே. வைத்தியர்களும் மக்களும் அவ்விடத்தில் இருந்துள்ளார்கள். இதை சிங்கள இராணுவ பேச்சாளரும் ஒத்து கொண்டிருக்கிறார். ஆதாரம் பிபிசீ தமிழில் (22.1.09) “பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட வள்ளிபுனம் பகுதியில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் எறிகணை தாக்குதலில் காயமடைந்த தனது பத்து வயது மகளைக் இளம் தாய் ஒருவர் இன்று வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு வந்திருந்தார். வள்ளிபுனம் மருத்துவமனையும் எறிகணையால் தாக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இதேபோன்று காயமடைந்த தனது கணவனை வவுனியா மருத்துவம்னைக்கு கொண்டுவந்த ஒரு பெண்ணும் கூறியுள்ளார்.
ஆனால் இதனை இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரி மறுத்துள்ளார். தம்மால் நேற்று பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் இன்று தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் எதுவும் தமக்குக் கிடையாது என்று அவர் கூறியுள்ளார். இராணுவத்தினர் அங்கு தாக்குதல் நடத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.” மேலதிக தகவலுக்குபிபிசீ தமிழில் ஒலிவடிவத்தை கேளுங்கள்.
மனிதத்திற்கெதிராய் பொய் பேசுவதுதான் சிறிலங்கா அரச ஊடகதர்மமாய் இருக்கலாம். ஆனால் உலககே சிங்களம் சொல்வதை நம்பிடும் என்ற கற்பனை வேண்டாம்.