கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுப்படுவதற்கு கிளிநொச்சியில் நாளை (12.11.2020) விசேட யாகம் இடம்பெறவுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபடுவதற்கு இந்து அலயங்களில் விசேட பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்ட நிலையில் குறித்த விசேட யாகம் நாளை கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாளை காலை 9 மணியளவில் பசுமை பூங்கா அருகில் உள்ள மீனாட்சி அம்மன் ஆலயத்தில் கிளிநொச்சி மாவட்ட செயலகமும், வன்னி பிராந்திய சைவகுருமார் ஒன்றியமும் இணைந்து குறித்த யாக வழிபாட்டினை ஏற்பாடு செய்துள்ளனர்.
இதன்போது நாடு கொரோனா தொற்றிலிருந்த விடுபடும் வகையில் விசேட யாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.