ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்யும் துரோகத்தைக் கண்டித்தும், ராணுவ உதவிகளைத் தடுப்பதற்கும் பிப்ரவரி 12ம் தேதி நாடாளுமன்றம் கூடும் நாளில் டெல்லியில் நாடாளுமன்றம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
முல்லைத் தீவில் 6 லட்சம் ஈழத் தமிழர்கள், சிங்கள ராணுவத்தின் கோரத் தாக்குதலால் மரணத்தின் பிடியில் சிக்கி உள்ளனர். இடைவிடாத பீரங்கித் தாக்குதல் வேறு. இரவு பகலாக விமானக் குண்டு வீச்சு, அதிலும் உலக நாடுகள் தடை செய்துள்ள கொத்துக் குண்டுகளை வீசுகிறது. நேற்று மட்டும் 37 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றுள்ளனர். ஜனவரி 7ம் தேதி காஸா பகுதியில் ஒரு கட்டிடத்தின் மேல் இஸ்ரேல் குண்டு வீசியதில் 45 பேர் கொல்லப்பட்டபோது, உலக நாடுகள் அதற்கு எதிர்ப்பாக கடும் கண்டனத்தை தெரிவித்தன. ஆனால் 6 கோடித் தமிழ் மக்களாகிய நாம், 20 கல் தொலைவில் கடலுக்கு அப்பால் படுகொலைக்கு உள்ளாகும் ஈழத் தமிழர்களைக் காக்கக் கதியற்றுப் போனோம்.
தற்போது நடைபெறும் தமிழ் இன அழிப்பு யுத்தத்தை, இந்தியாவின் மத்திய அரசு கொடிய நோக்கத்தோடு திட்டமிட்டு ஊக்குவித்து உதவுகிற மன்னிக்க முடியாத துரோகத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உலகெங்கும் உள்ள தமிழர்களின் உள்ளங்கள் பதறுகின்றன. அங்கமெல்லாம் நடுங்குகிறது. ராஜபக்சே அரசு மூர்க்கத்தனமான இனக் கொலையில் ஈடுபட்டுள்ளது.
ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்யும் துரோகத்தைக் கண்டித்தும், ராணுவ உதவிகளைத் தடுப்பதற்கும், ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுந்துயரத்தைப் போக்க அனைத்து மட்டங்களிலும் ஆதரவைத் திரட்டவும் பிப்ரவரி 12ம் தேதி இந்திய நாடாளுமன்றம் கூடும் நாளில் டெல்லியில் நாடாளுமன்றத்துக்கு அருகே மதிமுக சார்பில் என் தலைமையில் உண்ணாநிலை அறப்போர் நடைபெறும் என்று கூறியுள்ளார் வைகோ.
palli
இதெல்லாம் ரெம்ப மோசமாக தெரியவில்லையா?? நீங்களும் ஜெயலலிதாவும் கூட்டுமுன்னனி. ஆனால் அவர் ஈழம் என்னும் சொல்லையே இந்தியாவில் பாவிக்ககூடாது என ஏப்பம் விடுகிறார். நீங்க தூக்கத்தில்கூட ஈழமென புலம்புகிறீர்கள். இதில் நாம் எதை நம்புவது.
பல்லி.
பார்த்திபன்
ஐயோ இவங்க உண்ணாவிரதமென்ற புனிதமான ஒரு போராட்டத்தைக் கேவலப் படுத்தாம விட மாட்டாங்கள் போல. எண்டாலும் வைகோ சுமார் நான்கரை நாட்களில் ஏதாவது பீலா சொல்லி தனது உண்ணாவிரத நாடகத்தை முடித்து வைப்பார். அதென்ன நான்கரை நாட்களென்று யோசிக்கின்றீர்களா?? திருமா 4 நாட்களில் செய்த கோமாளித் தனத்தை வைகோ அரை நாளாவது அதிகமாகச் செய்தால்த் தானே இவர் அவரை மிஞசிய கோமாளி ஆகலாம்.
santhanam
சாதியே கடவுள் என்று வாழும் கட்சிகள் நாயக்கர். வன்னியர். தலித் என்று சொல்லிக் கொண்டு இவர்கள் .ஈழத்தில் புரட்சிசெய்ய போகிறார்கள் நடக்கிறதை போய்பாருங்கோ.
chandran.raja
இவர் யார் கையால் “யூஸ்”வாங்கி குடிப்பார் என குழப்பமாக இருக்கிறது!
தொப்புள்கொடி உறவுமுறையில் தான் வரும். அப்படியென்றால் யாராக இருக்கும் ………உணச்சிக்கவிஞர் காசி அண்னை? இதை முன்கூட்டியே ஊகித்து சரியாக சொல்பவர்களுக்கு மா.வீ சாட்டுபீகற் வழங்கப்படும்.