ரஷ்யாவின் தலையீட்டுடன் முடிவுக்கு வந்தது அர்மீனியா-அசர்பைஜான் போர் – நகோர்னோ-கராபத் பகுதி அசர்பைஜான் வசமானது !

அர்மீனியா, அசர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான எல்லையாக பிரிக்கும் பகுதியில் நகோர்னோ-கராபத் என்ற மாகாணம் அமைந்துள்ளது.  இந்த மாகாணம் அசர்பைஜானின் பகுதி என சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாகாணத்தில் பெரும்பான்மையானோர் அர்மீனிய ஆதரவாளர்கள் ஆகும்.
முடிவுக்கு வந்தது போர்: அசர்பைஜானிடம் சரணடைந்த அர்மீனியா ; ரஷியா  முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து - PUTHIYA PARIMAANAM
1994-ம் ஆண்டு நகோர்னோ-கராபத் மாகாணத்தை மையமாக வைத்து இரு நாடுகளும் இடையே நடந்த போரில் மாகாணத்தின் பெரும் பகுதியை அர்மீனியா கைப்பற்றியது.
மேலும், அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாகாணத்தை அர்மீனிய ஆதரவு மக்கள் நிர்வகித்து வந்தனர். நகோர்னோ-கராபத் மாகாணத்திற்கு என தனியாக பாதுகாப்பு படைப்பிரிவும் ஏற்படுத்தப்பட்டது. மேலும், இந்த தன்னாட்சி பகுதிக்கு அர்மீனிய அரசும் உதவிகளை செய்துவந்தது.
அன்றில் இருந்து நகோர்னோ-கராபத் மாகாணத்தை மையமாக கொண்டு பல ஆண்டுகளாக அர்மீனியா – அசர்பைஜான் இடையே மோதல்கள் அரங்கேறி வருகிறது. பல ஆண்டுகளாக சற்று தணிந்திருந்த பதற்றம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் தொடங்கியது.
தங்கள் வசம் இருந்த நகோர்னோ – கராபத் மாணத்தை முழுவதும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி அசர்பைஜான் தாக்குதல் நடத்த தொடங்கியது.
Armenia azerbaijan forces in nagorno karabakh conflict turkey russia |  World News
இந்த தாக்குதலுக்கு நகோர்னோ-கராபத் மாகாணத்தில் இருந்த படையினர் பதிலடி கொடுத்துவந்தனர். நகோர்னோ-கராபத் மாகாண படையினருக்கு அர்மீனியா ஆதரவு அளித்ததால் இந்த சண்டை அர்மீனியா-அசர்பைஜான் இடையே நேரடி போரை உருவாக்கியது.
அசர்பைஜானுக்கு துருக்கி தனது நேரடி ஆதரவை அளித்தது. அர்மீனியாவுக்கு ஆயுத ரீதியில் ரஷியா ஆதரவு அளித்த போதும் நேரடியாக களத்தில் இறங்கவில்லை. இந்த சண்டையை முடிவுக்கு  கொண்டுவர 3 மூன்று முறை அமைதி ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால், தொடர்ச்சியான மோதல்களால் அமைதி ஒப்பந்தங்கள் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து, அசர்பைஜான் – அர்மீனியா இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வந்தது.
இதற்கிடையில், நகோர்னோ-கராபத் மாகாணத்தில் உள்ள முக்கிய மற்றும் இரண்டாவது மிகப்பெரிய நகரமான சுஷா என்ற நகரை அசர்பைஜான் படைகள் கைப்பற்றியது.  இதையடுத்து 6 வாரங்களுக்கு மேலாக நடைபெற்றுவந்த போர் இறுதி கட்டத்தை எட்டியது. நகோர்னோ-கராபத் மாகாணத்தின் முக்கிய நகரை கைப்பற்றியதையடுத்து, போரில் தாங்கள் வெற்றிபெற்றுவிட்டதாக
அசர்பைஜான் அறிவித்தது.
இந்நிலையில், அர்மீனியா-அசர்பைஜான் இடையே ரஷியா முன்னிலையில் இன்று போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ரஷிய அதிபர் புதின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடந்த இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இரு தரப்பும் உடனடியாக சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டன.
மேலும், தாங்கள் கைப்பற்றிய நகோர்னோ-கராபத் மாகாணத்தின் முக்கிய பகுதிகளை அசர்பைஜான் தங்கள் வசமே வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் பல வாரங்களாக நடந்த போரில் அர்மீனியா தோல்வியடைந்து அசர்பைஜான் வெற்றிபெற்றதாகவே தெரியவந்துள்ளது.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க ரஷியா படைகள் நகோர்னோ-கராபத் மாகாணத்தில் இருநாட்டு எல்லைகளை பிரிக்கும் பகுதிகளில் குவிக்கப்படுகிறது.
இந்த அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் ரஷிய படைகள் அமைதியை நிலைநிறுத்தும் வகையில் நகோர்னோ-கராபத் பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, 1,000-க்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தி பல வாரங்களாக நடைபெற்றுவந்த அர்மீனியா-அசர்பைஜான் போர் முடிவுக்கு வந்துள்ளது.
முன்னதாக இந்த சண்டையில் அர்மீனியாவுக்கு ரஷியா ஆதரவு அளித்தபோதும் நேரடியாக களத்தில் இறங்கவில்லை. மேலும், இரு தரப்பிற்கும் இடையே அமைதியை ஏற்படுத்தவே முயற்சித்து வந்தது.
இதற்கிடையில், ரஷிய ராணுவத்திற்கு சொந்தமான மிக்-24 ரக ராணுவ ஹெலிகாப்டர் நேற்று அசர்பைஜான் வான்பரப்பிற்கு அருகே அர்மீனியாவின் வான்பரப்பிற்குள் பறந்து கொண்டிருந்தது.சண்டை உச்சத்தில் இருந்த நேரம் என்பதால் ஹெலிகாப்டர் அர்மீனியாவுக்கு சொந்தமானது என நினைத்த அசர்பைஜான் பாதுகாப்பு படையினர் அந்த ரஷிய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தினர். இந்த தாக்குதலில் ரஷிய ஹெலிகாப்டரில் பயணம் செய்த 2 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 3 வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ரஷியாவுக்கும் அசர்பைஜானுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. இந்நிலையில், அர்மீனிய வான் எல்லைக்குள் பறந்துகொண்டிருந்த ரஷிய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதற்கு ரஷியாவிடம் உடனடியாக அசர்பைஜான் பகீரங்க மன்னிப்புகேட்டுள்ளது. போர் பதற்றத்தில் தயார்நிலையில் இருந்தபோது இந்த தாக்குதல் தவறுதலாக நடந்து விட்டதாக அசர்பைஜான் ரஷியாவிடம் மன்னிப்பு கோரியமையும் குறிப்பிடத்தக்கது.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *