தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மலேஷியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்று பரவியுள்ள தகவலைத் தொடர்ந்து, அவரைத் தேடும் பணியில் தீவிரமாக மலேஷிய போலீஸ் மற்றும் கமாண்டோ படை இறங்கியுள்ளனர் என சில செய்திகள் குறிப்பிடுகின்றன. வன்னிப் பகுதியில் பெரும் நிலப்பரப்பை சிங்கள ராணுவம் ஆக்கிரமித்துவிட்ட நிலையில் புலிகள் எந்தவித எதிர் தாக்குதலும் நடத்தாமல் உள்ளனர்.
இன்னும் சில கிலோ மீட்டர்கள் மட்டுமே புலிகளின் வசம் உள்ளதாம். இந்நிலையில், பிரபாகரன் மற்றும் முக்கிய தளபதிகள் அனைவரும் ஈழப்பகுதியிலிருந்து தப்பி மலேஷியா அல்லது தாய்லாந்துக்கு தப்பிச் சென்றுவிட்டிருக்கக் கூடும் என்று உளவு அமைப்புகள் தெரிவித்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்தத் தகவல் வெளியானதும் மலேஷிய போலீஸ் மற்றும் ராணுவம் ஊஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
‘பிரபாகரன் மலேஷியாவுக்குள் நுழைய வாய்ப்பில்லை. ஆனால் நாங்கள் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. எனவே நாடு முழுக்க தேடுதல் வேட்டையைத் தொடங்கிவிட்டோம்’ என அந்நாட்டின் காவல்துறை உயர் அதிகாரி மூசா ஹூஸைன் கூறியுள்ளார். ஆனால் இதுகுறித்து தாய்லாந்து அரசு எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.
‘பிரபாகரன் ஒருபோதும் ஈழத்தைவிட்டு வெளியேற மாட்டார். இது திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம். உண்மை என்னவென்று நாளை தெரியும்’, என்று புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.—–
padamman
நாளை என்ன பிரபாகரன் வெளியில் வந்து சரனடையபோகின்றரா?
thambu
ஒருவேளை மலேசியாவில் வைத்து தமிழீழம் டிக்கிளை பண்ணப் போறார் போலும்.
kamal
போற போற இடங்களையும் நாசமாக்காமல் இருந்தால் சரி.
thesam ;புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன என்று எந்த அமைப்புகளைச் சொல்லுறீங்கள்
பார்த்திபன்
பு(எ)லித்தம்பி மலேசியா செல்வதற்கு வாய்ப்புக் குறைவு. ஆனால் தாய்லாந்திற்கு தப்பிச் சென்றிருக்கவே வாய்ப்புகள் அதிகம். …..
தாமிரா மீனாஷி
போரில் முதலில் பலியாவது உண்மை என்ற முதுமொழியை அன்பர்கள் எவரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்திய அமைதிப்படையின் நரவேட்டைக் காலத்தில் பிரபாகரன் இறந்துவிட்ட்தாக அமைதிப் படையாலும் அவர்களது ஆத்ரவு சக்திகளாலும் பிரச்சாரம் பெருமளவில் முடுக்கி விடப்பட்டது யாவரும் அறிந்ததே…………
Saraniyan
தாமிரா மீனாஷி!
உண்மையில் போரில் முதலில் பலியானது அவர்தான். உயிர்பலி மட்டும் பலியா? அது ஒரு தடவையோடு முடிந்துவிடும்.
தன்னை வெளியிலே காட்டமுடியாத தலை மறைவென்ற பலிக்கு முதலில் ஆளானவரல்லவா?
எங்கே இருந்தாலும் வினாடிக்கு வினாடி அழுகுரல்கள்/ வெடிச்சத்தம்/ திகில் கனவுகள்/ மனிதமுகத்தை காணமுடியாத தனிமை/ மனைவிகூடக் கொன்றுவிடுவாளோ என்ற சந்தேகம் . . . . . . .
இவைகள் இவனர இடைவெளியற்று துரத்தியபடியேயிருக்கும்!
இதைவிட என்ன தண்டனை வேண்டியுள்ளது? பாரிய பாதிப்பல்லவா இது?
தாமிரா மீனாஷி
சரணியன் அவர்களே!
நீங்கள் கூறுவது அனைத்திற்கும் ஸ்டாலின்,மாவோ, பொல்பொட் போன்ற புரட்சியாளர்களிடமிருந்தும் நாம் பாடம் கற்றுக் கொள்ளலாம் தோழரே!
santhanam
உலக விடுதலை போரட்ட வரலாற்றில்முதல் முதல் மக்களை சந்திக்காத தலைவர், மக்களின் அபிலாசைகளை கேட்காத தலைவர், விடுதலை சம்பந்தமாக புத்தகம் எழுதாத ஒரு தமிழ்ஈழ தலைவனை, இவர்களுடன் ஸ்டாலின் மாவோவுடன் ஒப்பிடாதீர்கள்.
Damilan
பொல்பொட் புரட்சியாளன் அல்ல பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொலை செய்த சர்வாதிகாரி. பிரபாகரனைப் போல்.
மாற்றுகருத்துதோழர்
“ஸ்டாலின் மாவோ பொல்பொட் ”
ஸ்டாலின் பொல்பொட் ஆகியோர் சர்வாதிகாரியாக அறியப்பட்டவர்கள் என அறிந்தேன். மாவோன் கதையும் அப்படியா! புரட்சி புரட்சியென்று ஒராளுக்கு ஒராள் சர்வாதிகாரத்தில் குறைந்த ஆட்களில்லை.
chandran.raja
மீனாஷ்சி! யாழ்பாண மத்திய வர்கத்தின்பேரில் சூரியதேவன் எல்லா ஆட்டங்களையும் ஆடிமுடித்துவிட்டார். இனியென்ன ஆட்டம் ஆட இருக்கிறது.
நீங்கள் வரலாற்றை தாறுமாற விளங்கி வைத்திருக்கிறீர்கள். உங்கள் நோக்கம் அப்பாவி மக்களை பற்றியதாக இருந்தால் அதைவிட சந்தோஷபடுபவன் நான்னாகத் தான் இருக்க முடியும்.
ஒரு இனவாத அரசு-அரசுகளை தோற்கடிக்க உரிமைகளைப்பெற இனமதவெறியை ஏற்படுத்தி இரத்தஆற்றை ஓடவைத்தவன் பக்கம் நின்று சாமரைவீசுவது போல்லல்வா இருக்கிறது. தெளிவாக உங்கள் கருத்தை முன்வைய்யுங்கள். பிரபாகரன் செய்த கொடுமைகள் துரோகங்களை விட சிங்களஅரசு பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை.
மாற்றுகருத்துதோழர்
“பிரபாகரன் செய்த கொடுமைகள் துரோகங்களை விட சிங்களஅரசு பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை”-chandran.raja
புலிகளையும் ஈழவிடுதலையையும் எதிர்த்த தமிழர்கள்தான் புலிகளால் பாதிக்கப்பட்டனர். தமிழன் என்ற ஒரு காரணத்திற்காக 1949லிருந்து இன்று வரை சிங்கள இனவாத அரசுகளினால் இனவழிப்பு செய்யபடுகின்றான் தமிழன்.
palli
27 ஆயிரம் போராளிகள். பல இயக்க தலைவர்கள்: இன்னும் எத்தனையோ அரசியல் தலைவர்கள். கணக்கிட முடியாத மக்கள். இத்தனையையும் இளந்த பின்னும் உவமைக்கு உலகநாடுகளை காட்டுவது …………..இப்படிதான் இருக்கு.
பல நாடுகளுக்கு உதாரணம் சொல்ல எமதுநாடு விரிந்து கிடக்கும் போது அயல்நாடுகளை உவமைக்கு அழைப்பது ……………….. மாதிரி உள்ளது. பொங்கையா நீங்களும் உங்க குறுக்குவழியும்…………
பல்லி.
பார்த்திபன்
மாற்றுக்கருத்து தோழரே
நீங்கள் சொல்வது சரிதான். சிங்கள அரசு 1949 இலிருந்து இன்றுவரை செய்த கொலைகளை பிரபகரன் குறுகிய காலத்தில் முறியடைத்து சாதனை படைத்தவரல்லோ. புலிகளை எதிர்த்தவர்கள் என்பதை விட புலிகளுக்கு சலாம் போடாதவர்களை துரோகிப்பட்டம் கட்டி போட்டுத் தள்ளினார்கள் புலிகள். அது மட்டுமில்லாமல் புலிகளால் துரோகிப்பட்டம் கட்டப்பட்டு கொல்லப்பட்டவர்களை அந்தந்த ஊர் மின்கம்பங்களில் கட்டி வைக்காமல் பல ஊர்கள் தாண்டி தண்டிக்கப்பட்டவரை தெரியாத ஊரிலேயே கொண்டு சென்று புலிகள் மின்கம்பங்களில் கட்டினார்கள். காரணம் அதே ஊரில் கட்டிவிட்டால் தமது குட்டு உடைபட்டுப் போகும் என்பதால். பாருங்களேன் இனி எத்தனை வண்டவாளங்கள் படிப்படியாக வருமென்று. அப்போது தற்போது புலிகளுக்கு வக்காலத்து வாங்கி நிற்போரும் வாயடைத்துப் போய் நிற்பார்கள்.
பார்த்திபன்
உண்மையில் இன்று புலிகளனின் இந்த அழிவிற்குக் காரணம் இலங்கை இராணுவத்தின் வியூகம் மட்டுமல்ல பல வருடப் பழமை வாய்ந்த புனித மடுமாதாவின் ஆத்திரமும் கூட. பிரபாகரன் தன் சுயநலத்திற்காக பலவருடங்களாக பீடத்தில் வீற்றிருந்த மாதாவை அங்கிருந்து அகற்றினார். இன்று அதற்குரிய பலாபலனை அனுபவிக்கின்றார். சும்மாவா சொன்னார்கள் அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்று
தாமிரா மீனாஷி
பிரபாகரன் செய்ததாக சொல்லும் அத்தனை காரியங்களையும் மாற்று இயக்கங்களும் செய்தன என்பதை யாராலும் மறுக்கமுடியுமா? இன்று சோசலிசமும் புரட்சியும் பேசுபவகள்கூட அன்று ஆயுததாரிகளாய் மக்களைப் பயமுறுத்தவில்லையா? வெளிநாடுகளுக்கு ஓடிவந்தவுடன், ஜனநாயகப் புரட்சி அது, இது என்று மக்களால் புரிந்து கொள்ளப்பட முடியாத விஷயங்களை ஓயாமல் கதைக்கிறீர்கள். “உஙகளில் யார் பாவம் செய்யாதவரோ அவர் முதல் கல்லை எறியுஙகள்” என்றார் இயேசு பிரான். உஙகளில் எவருக்கும் அந்தத் தகுதி இல்லை.
போராட்டங்கள் வெற்றியடையலாம், தோல்வியடையலாம். ஆனால், எமது தலைவன் எமது மண்ணிலிருந்து வந்தவன். எமது மண்ணுக்குரிய அம்சங்கள் அவனிடம் தெரிவதில் என்ன தவறு கண்டீர்கள்? அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா வரை வாழும் தமிழ் தாய்க்குலத்தைக் கேட்டுப்பாருங்கள்: “சிங்களவனால் அவரின் விரல் நுனியைக்கூடத் தொட முடியாது” என்று அடித்துச் சொல்வார்கள்.
BC
//தாமிரா மீனாஷி-……பொல்பொட் போன்ற புரட்சியாளர்களிடமிருந்தும் நாம் பாடம் கற்றுக் கொள்ளலாம்//
நிறைய கற்று கொண்டேயிக்கிறோம். அனுபவித்தும் கொண்டே இருக்கிறோம்.
/பல நாடுகளுக்கு உதாரணம் சொல்ல எமதுநாடு விரிந்து கிடக்கும் போது அயல்நாடுகளை உவமைக்கு அழைப்பது……….. மாதிரி உள்ளது./
palli வழிமொழிகிறேன்.
//தாமிரா மீனாஷி-பிரபாகரன் செய்ததாக சொல்லும் அத்தனை காரியங்களையும் மாற்று இயக்கங்களும் செய்தன என்பதை யாராலும் மறுக்கமுடியுமா?//
செய்தன. பிரபாகரன் அதைவிட அதிகமாக மோசமாக செய்கிறார்.
//சோசலிசமும் புரட்சியும் பேசுபவகள்கூட அன்று ஆயுததாரிகளாய் மக்களைப் பயமுறுத்தவில்லையா? //
நிச்சயமாக செய்தன.
EPRLF, PLOT, TELO அநியாயம் செய்தது என்பதிற்காக பிரகாகரன் என்ற கொடியவரை ஆதரித்து தமிழர்கள் வாழ்வை மேலும் அழிக்க சொல்கிறீர்களா? முன்பு பயங்கரமானவர்களை ஆதரித்தீர்கள் அதனால் பயங்கரமானவர்களை தொடர்ந்து ஆதரியுங்கள் என்று கேட்பது என்ன நியாயம்?
palli
//அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா வரை வாழும் தமிழ் தாய்க்குலத்தைக் கேட்டுப்பாருங்கள்//
அதுக்கு முன் பிள்ளைகளை பறிகொடுத்த தாய்மாரின் கதறலை இலங்கையில் காதுகொடுத்து கேழுங்க. தாமிரா ரெலோ தலவரையும் பல போரளிகளையும் கல்வியங்கட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள் புலிகள் சுற்றிவளைத்து அடித்த போது அவர்களுக்கு உதவ (சிறிசபாவுக்கு) சில அமைப்புகள் முன்வந்தன. ஆனால் சிறி அதுக்கு தமது தோழருக்கு என்ன நடக்குதோ அதுவே எனக்கும் நடக்கட்டும் என சவாலாக நின்று
கோளை புலிகளால் கொல்லப்பட்டார். ஆனால் இன்று புலிதலை யாராவது என்னைமட்டும் காப்பாத்துங்கோ என சொல்லியபடியே இதுவரை (சில தினங்களில்) 40 மைலுக்கு மேல் ஓடி விட்டார். அன்று தோழருக்காக உயிரை விட்ட சிறி எங்கே. இன்று தன்னை பாதுகாக்க பல உயிரை பறி
கொடுக்கும் புழிதலை எங்கே. நான் முன்பே சொல்லிவிட்டேன் வஸ்தியாம் பிள்ளையை கிணற்றுக்குள் பார்த்தன்று தொடங்கிய ஓட்டமும்
வெருட்ச்சியும் இன்றுவரை தணியவில்லை புலிகள் பாசையில் எல்லாதாக்குதலும் தலைவரின் நேரடி பார்வையில் தான் நடக்குமாம்.
அப்படியானால் இப்போது ஓடுவதும் தலைவரின் முன்னோட்டத்தில்தான் பினோடுகிறார்களா??? தாமிரா சிறிது சிந்திக்கலாமே.