“ஐ.எஸ் தீவிரவாதிகள் இலங்கையில் இருப்பதாகவும் இலங்கையிலிருந்து சென்று ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொண்டவர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாகவும்” பிரித்தானிய செய்தி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் உரிமை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ் தீவிரவாத இயக்க தீவிரவாதிகள் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் தொடர்ந்தும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் கலிபா ஆட்சி வீழ்ச்சியைத் தொடர்ந்தும் அந்த அமைப்பு கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மொஸாம்பிக்கில் 50க்கும் மேற்பட்ட கிராம மக்களை கொடூரமான முறையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் படுகொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.