உலக அளவில் கொரோனா வைரஸ் பரவும் வீதம் நாளுக்கு அதிகரித்து வருகின்றது. குறிப்பாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நாடுகளின் பட்டியலில் இந்தாியாவும் ஒன்றாகும். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இன்னும் வேகமாக கொரோனா வைரஸ் பரவிவருகின்றது. இப்படியான ஒருநிலையில் கூட தமிழ்நாட்டு மக்கள் தீபாவளி கொண்டாட்டத்திற்காக பரபரப்பாக தயாராகிவருகினறனர். அங்கிருக்க கூடிய பல்பொருள் அங்காடிகளில் மக்கள் அலை அலையாக திரண்டு நிற்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் தீபாவளிப் பண்டிகை நெருங்கி விட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க வந்த வண்ணம் உள்ளனர். திருச்சி மட்டுமின்றி பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க பகுதிகளில் கடல் அலை போன்று மனிதர்கள் குழுமியிருந்தததை காணமுடிந்தது. காணமுடிந்தது.
பொதுவாகவே தீபாவளி காலங்களில் இந்தப் பகுதிகள் மக்கள் கூட்டங்களால் அலைமோதும். இருந்த போதும் தற்போது உள்ள சூழலில் கொரோனா காரணமாக அதிக அளவு மக்கள் கூட வேண்டாம் என அறிவுறுத்தினால் கூட மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிய ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தின் காரணமாக கொரோனா அச்சத்தையும் மீறி மக்கள் குவிந்துள்ளனர்.