“பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதின் ஒரு இஸ்லாமிய தீவிரவாதி. அவர் வன்னிதேர்தல் தொகுதியில் உள்ள தமிழ் மக்களை அடிமையாக்கி வைத்துள்ளார்” என புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான நடராஜா ரவிக்குமார் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
மட்டக்களப்பு முனைத்தீவு அருள்மிகு ஸ்ரீமாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 75ஆவது பிறந்த தினத்தினை முன்னிட்டு விசேட பூஜை நடைபெற்றது.
வழிபாடுகளை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதின் ஒரு இஸ்லாமிய தீவிரவாதி.ரிசாத் பதியூதின் வன்னிதேர்தல் தொகுதியில் உள்ள தமிழ் மக்களை அடிமையாக்கி வைத்துள்ளார்.
முஸ்லிம்களின் ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு தேவையில்லை. ஆனால் பலவந்தமாக அவர்கள் எங்களுக்கு ஆதரவளித்தார்கள். எமது கிழக்கு தமிழ் மக்களுக்கு மீண்டும் பிரச்சினைகளை ஏற்படுத்துவீர்களானால் உங்களுக்கு தக்க பாடம் நாங்கள் புகட்டுவோம். கிழக்கு மண் தமிழ் மக்களுடைய மண்ணாகும். எங்களுடைய போராட்ட வீரர்கள் போராடி பெற்றுத் தந்த இந்த மண்ணை முஸ்லிம்களை ஆள விடமாட்டோம்.
மேலும் ,முஸ்லிம் மக்களுடைய ஜனாஸாவை அடக்கம் செய்ய வேண்டுமென அசாத் சாலி கூறுகின்றார். இது முஸ்லிம் நாடல்ல. இது சிங்கள பௌத்த நாடாகும். இந்த நாட்டிற்குள்ளே இருப்பது ஒரே சட்டமாகும்” எனவும் அவர் கூறியுள்ளார்.