முன்னாள் கிழக்குமாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து பல்வேறுபட்ட தரப்பினரும் பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த விமர்சனங்கள் குறித்தும் சமீபத்தைய நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நீதியமைச்சர் அலிசப்ரி பாராளுமன்றத்தில் பதிலளித்துள்ளார்.
அதில் நீதியமைச்சர் குறிப்பிடும்போது “சிலர் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே பிள்ளையான் ஐந்து வருடங்கள் சிறையிலிருந்தார்.
அந்த வாக்குமூலம் சுயவிருப்பத்தின் அடிப்படையில் வழங்கப்படவில்லை என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. பிள்ளையானிற்கு எதிராக இதன் காரணமாக எந்த ஆதாரங்களும் இல்லை என குறிப்பிட்ட நீதியமைச்சர் நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சனம் செய்பவர்களை உண்மையை கண்டறியுமாறும்,நியாயமற்ற விமர்சனங்கள் மூலம் சமூகத்தினை தவறாக வழிநடத்தவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.