இலங் கைக்கான ஜப்பானிய விஷேட தூதுவர் யசூசி அகாசியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சனிக்கிழமை இரவு சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், ரி.கனகசபை, எஸ். பத்மநாதன், ரி.பத்மினி, எஸ். அரியநேத்திரன் ஆகியோரே சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
வன்னியில் அரச படைகளால் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அவல நிலைமைகள் தொடர்பாகவும் அங்குள்ள மக்கள் எதிர் நோக்கும் பாரிய பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளனர். இதனை விட அரசியல் தீர்வொன்றின் மூலம் உரிய தீர்வொன்றைக் காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.