பொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்புமருந்து வழங்க வழி செய்யும் மசோதா ஜப்பான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.
இதுகுறித்து ஜப்பான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “ அனைத்து பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கும் மசோதாவை ஜப்பான் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து 1 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனா தடுப்பு மருந்தை பெற உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் டோக்கியாவில்தான் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்குகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.