இங்கிலாந்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது. ஒரே நாளில் 27 ஆயிரத்து 052 பேருக்கு தொற்று உறுதியானதால் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது .
இந்நிலையில் “லண்டன் மக்கள் நகரத்தை விட்டு வெளியேற நினைத்தால் கைது செய்யப்படுவர் ” என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் மேலும் கூறியதாவது:
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தென்கிழக்கு இங்கிலாந்தின் பெரும் பகுதிகளுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்துக்காக விதிகள் தளர்த்தப்பட மாட்டாது. இங்கிலாந்தின் மற்ற பகுதிகளுக்கு கிறிஸ்துமஸ் தினம் குறைக்கப்பட்டுள்ளது.
லண்டன், கென்ட், எசெக்ஸ் மற்றும் பெட்போர்ட்ஷைர் போன்ற பகுதிகளில் நள்ளிரவு முதல் 4-ம் அடுக்கு பொது முடக்கம் அறிமுகப்படுத்தப்படும். அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு தங்குமிடத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும். அங்கு அனைத்து அத்தியாவசிய கடைகளும் மூடப்பட வேண்டும்.
லண்டன் மக்கள் நகரத்தை விட்டு வெளியேற நினைத்தால் கைது செய்யப்படலாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
அதிகபட்சமாக 3 குடும்பங்கள் மட்டுமே இம்மாதம் 23 முதல் 27-ம் தேதிவரை ஒன்றுகூட முடியும். பிரிட்டனில், கிருமித்தொற்று திடீரென உயர்ந்துள்ள நிலையில் இத்தகைய அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது என தெரிவித்துள்ளார்.