இந்த வாரத்தினுள் மேலும் இரு மாகாண சபைகள் கலைக்கப்படலாமென அரசுதரப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இவ் வாரத்தின் இறுதிப் பகுதியில் மேல் மாகாண மற்றும் ஊவா மாகாண சபைகளைக் கலைப்பதற்கு அரச உயர் மட்டம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை தென்மாகாண சபையை சிறிது காலம் தாமதித்து கலைப்பதற்கும் அரசு உத்தேசித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.