விடுதலைப்புலிகள் மீது கருணை கிடையாது – பிரணாப்

pranaf.jpgவிடுதலைப்புலிகள் இயக்கம் மீது எந்தவிதமான கருணையும் கிடையாது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.  இலங்கை பிரச்சனை தொடர்பாக அந்நாட்டு அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்த பிரணாப் இன்று இலங்கை புறப்பட்டார். புறப்படும் முன் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதிகளுக்கும் அனைத்து வகையான தீவிரவாதங்களுக்கும் எதிராக இந்தியா போராடி வருகிறது. எந்த விதமான தீவிரவாத இயங்கங்களிடத்திலும் கருணை கிடையாது. குறிப்பாக விடுதலைப்புலிகள் இயக்கம்.  இந்த இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு. இலங்கை பிரச்சினையில் அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் இந்தியா தெளிவாக இருக்கிறது என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • padamman
    padamman

    இன்றய உடனடிதேவை மக்களை பாதுகப்பது மட்டும் அடுத்தது அரசியல் தீர்வு இதை இந்தியா சரியாக செய்யும் என்று நம்புவோம்.

    Reply
  • nada
    nada

    இந்தியா என்றால் என்ன? தமிழ்நாடு தவிர்ந்தது. தமிழ்நாட்டுகே பெரிசாக செய்யாத மத்திய அரசு. ஈழத்தமிழருக்காகவா பெரிசாக செய்யப்போகிறது. மிஞ்சிப்போனால் ஒன்றுக்கும் ஆகாத மாகண சபைகள். பேசாமல் தமிழரெல்லாம் சிங்களவரா மாறிடுங்கப்பா!

    Reply
  • palli
    palli

    ஏழைக்கு (ஈழதமிழர்) பழம்சோறும் அமிர்தம்தான். கிடைத்ததை உண்டு உயிர்வாழ முற்படுவான். சேட்டுளுக்கு (புலம்பெயர் தமிழர்) பழம்சோறு கசக்கும் பாயாசம் இனிக்கும் யாருக்கு எதுதேவையோ அதுதான் அவரவர் தேடுவார்கள். கிளிநொச்சி மாவட்டக்தையே காப்பாத்த முடியாத புண்ணாக்குகளுக்கு மாகாணசபை புழிக்குதாம். என்னத்தை சொல்ல.
    பல்லி

    Reply