“கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலை, புதைக்கவோ எரிக்கவோ அரசாங்கம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் சுகாதார அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரpவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவரின் உடலில் இருக்கும் வைரஸ் அழிவதில்லை. எனவே குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் அவரின் உடலை வைத்திருக்கும்போது அக்கொள்கலன் சேதமடையும் . கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை, குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைப்பதின் ஊடாக அக்கொள்கலன்கள் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலைமை காணப்படுகின்றதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலை, புதைக்கவோ எரிக்கவோ அரசாங்கம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறந்த முஸ்லீம்கள் சிலருடைய உடல்களை எரிக்காது குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைக்குமாறு காலி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.