“இந்திய விவசாயிகளின் போராட்ட விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும்” – அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் !

இந்தியாவில்  மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 4 வாரங்களுக்கும் மேலாகப் போராடி வரும் விவசாயிகள் பிரச்சினையில் அமெரிக்கா தலையிட்டு இந்திய அரசிடம் இது குறித்துப் பேச வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவுக்கு அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் பிரமிளா ஜெயபால் உள்ளிட்ட 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரமிளா ஜெயபால் , டொனால்ட் நார்கிராஸ், பிரென்டன் எஃப் போயல், பிரையன் பிட்ஸ்பாட்ரிக், மேரி கே ஸ்கேன்லான், டெபி டிங்கில், டேவிட் ட்ரான் ஆகியோர் பாம்பியோவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்தியாவில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் உலகளவில் கவனத்தை நாளுக்கு நாள் ஈர்த்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் விவாயிகள் போராட்டம் குறித்து 12-க்கும் மேற்பட்ட அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் கவலைத் தெரிவித்திருந்தார்கள்.

Farmers Protest at Delhi Borders May Act as COVID-19 Superspreader Event:  Experts || டெல்லியில் விவசாயிகள் போராட்டம்: கொரோனா பரவல் அதிகரிக்க  வழிவகுக்கும் - நிபுணர்கள் கருத்து

அமெரிக்க சீக்கிய கூட்டமைப்பின் துணைத்தலைவர்  ஜான் காராமென்டி,  ஜிம் கோஸ்டா, ஷீலா ஜேக்ஸன் லீ ஆகியோர் இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சாந்துக்கு கடிதம் எழுதி, விவசாயிகள் போராட்டத்துக்கு தங்களின் ஆதரவையும், அமைதியாக போாரட்டம் நடத்துவது விவசாயிகளின் உரிமை எனத் தெரிவித்திருந்தார்கள்.

விவசாயிகள் போராட்டம் நடத்த உரிமை இருக்கிறது என உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளதால், அவர்களுக்கு் பாதுகாப்பு வழங்க வேண்டும் என குடியுரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டேவிட் ட்ரான் இந்திய அரசைவலியுறுத்தியிருந்தார்.

ஆனால், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வெளிநாட்டு தலைவர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரின் கருத்துக்கள் தேவையற்றது, உண்மை நிலவரங்களை, அறியாமல் பேசுகிறார்கள். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *