மட்டக் களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவும் இரத்தத் தட்டுப்பாட்டை நீக்க இரத்ததான முகாம்கள் நடத்தப்படுவதாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் எம். முருகானந்தம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சுகாதாரநல கல்வி நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இரத்ததான முகாம், மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையில் நடைபெற்றது. போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் எம். முருகானந்தம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேற்படி நிலையத்தின் மாணவர்களினால் 30 பைந்த் இரத்தம் சேகரிக்கப்பட்டது. நாளொன்றுக்கு 50 முதல் 60 பைந்த் இரத்தம் இரத்த வங்கியிலிருந்து விநியோகிக்கப்படுவதாக பணிப்பாளர் தெரிவித்தார்.