“தமிழனாக ஏன் இந்தியாவில் பிறந்தேன் என்று வேதனையாக இருக்கு’’ : நடிகர் வடிவேலு

vadivel.jpgஇலங்கை பிரச்சனை தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன் ராமேஸவரத்தில் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் நடிகர் வடிவேலு. இப்போராட்டத்தில் பேசும்போது, ‘’நம்ம தமிழச்சிகளை கற்பழித்து உடம்பு முழுக்க பிளேடால் கிழிக்கிறான் சிங்களன். இந்த கொடுமையெல்லாம் எப்போது முடிவுக்கு வரும்’’ என்று அப்போது வேதனைப்பட்டார். பின்னர், சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் நடந்த இலங்கை பிரச்சனை போராட்டத்திலும் கலந்து கொண்டு குரல்கொடுத்தார்.

இந்நிலையில், இலங்கை பிரச்சனையை முன்வைத்து 7 வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி மாணவர்களை சந்தித்தார் வடிவேலு. அப்போது, ‘’இலங்கையில் 300 பேர் இறந்துவிட்டனர், 1000 பேர் காயமடைந்தனர் என்ற செய்திகளை படிக்கும் போது வேதனையாக இருக்கு. தமிழனாக ஏன் இந்தியாவில் பிறந்தேன் என்று வேதனையாக இருக்கு’’ என்றார். அவர் மேலும், ‘’மாணவர்கள் போராட்டம்தான் எல்லா போராட்டத்திற்கும் வெற்றியை அளித்துள்ளது. இப்போராட்டமும் வெற்றியை அளிக்கும்’’ என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • chandran.raja
    chandran.raja

    விஜயகாந்தை தோற்கடிக்க வடிவேலுக்கு வன்னிமக்கள் கிடைத்திருக்கிறார்கள். தான்போட்ட சபதத்தையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
    வன்னிமக்கள் இன்னும் யார் யார் கையில் சிக்குப்பட்டு வெளிவரப் போகிறார்களோ?
    கருனாநிதிக்கு -செந்தமிழன்
    நெடுமாறனுக்கு -உலகத்தமிழன்
    வை.கோபாலசாமிக்கு-திராவிடத்தமிழன்
    டாக்டர்.ராமதாஸ்சுககு-பாட்டாளித்தமிழன்
    வடிவேலுக்கு-வன்னித்தமிழன்

    Reply
  • nathan
    nathan

    “வல்வெட்டித்துறையில் பிறந்து வன்னிபோர் முனையில் நிண்டிருக்க வேண்டிய நான்” என்று சேர்த்து சொல்லியிருந்தால் நல்ல நடிப்பாய் இருந்திருக்குமே வடிவேலு!!

    Reply
  • santhanam
    santhanam

    வல்வெட்டிதுறையாரின் ஆதிக்கத்தால் தான் இன்று தமிழ்ஈழ விடுதலைபோரட்டம் இப்படி சீரழிந்து செல்வதற்கு காரணம்.

    Reply
  • thurai
    thurai

    வடிவேலுவின் கொமடியைப் பார்த்து ஈழத்தமிழர் சிரிப்பது மட்டும்தான் சினிமா உலகமறியும். ஈழத்த்மிழரின் ஈழவிடுதலைப் போராட்டத்தைப் பார்த்து உலகம் சிரிப்பதை வடிவேலு அறியக் காரணமில்லை.

    துரை

    Reply
  • palli
    palli

    வடிவேலுவுக்கு தமிழரை சிங்கள்வன் மட்டும்தான் அழிப்பதாக நினைத்து அவர்களை திட்டுகிறார். ஆனால் முன்பு புலியும்; இப்போது மகிந்தாவுக்கு உதவியாக பல பளய புரட்ச்சி மானிடர்களும்; அரசியல் புறொக்கர்களும் (பதவிக்காக) செயல்படுவது அவருக்கு தெரிந்தால் தானுண்டு தனது சிரிப்புண்டென இருப்பார் அல்லவா.

    Reply