இந்தோ னேசியாவில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் யோகா செய்வது, வேத மந்திரங்களை முழங்குவது, தியானம் செய்வது ஆகியவற்றுக்கு இந்தோனேசிய உலமா கவுன்சில் தடை விதித்துள்ளது. இந்தோனேசியாவின் முக்கிய மத அமைப்பா உலமா கவுன்சில் சமீபத்தில் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதில் யோகா முஸ்லீம் மத நம்பிகைகக்கு விரோதமானது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், முழுமையான தடையை அவர்கள் விதிக்கவில்லை. இதுகுறித்து உலமாகவுன்சில் எடுத்த முடிவில், இந்தோனேசிய முஸ்லிம்கள் யோகாவை வெறும் உடற்பயிற்சியாக மட்டுமே செய்ய வேண்டும். அதோடு இணைந்து வேத மந்திரங்களை உச்சரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படி வேத மந்திரங்களை முழங்குவது, தியானம் செய்வது, முஸ்லிம் மத சட்டங்களுக்கு எதிரானது. இதனால் முஸ்லிம் மக்கள் வேறு மதத்தினரின் நம்பிக்கையை பின்பற்ற நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
SUDA
இந்த செய்தி இப்பத்தான் தேசத்துக்கு தெரிய வந்ததோ? அதுதான் எங்களுக்கு பழைய செய்தியாயிற்றே.(1 1/2 மாதங்கள்)