வடபகுதி யுத்தத்தில் வெற்றியீட்டியமைக்காக அரசாங்கத்தையும் படையினரையும் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பாராட்டியுள்ளார். வெற்றியை சாத்தியமாக்கிய எமது ஆயுதப்படைகளின் வீரத்தையும் உணர்வையும் நாங்கள் எந்தவித தயக்கமுமின்றி பாராட்டுகின்றோம். எமது நாட்டின் இறைமை பாதுகாக்கப்பட்டுள்ளது.அத்துடன் நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று ரணில் கூறியுள்ளார். பயங்கரவாத நடவடிக்கைகளை தடுத்ததற்காக ஆயுதப்படையினருக்கு ஐ.தே.க. மரியாதை செலுத்துகின்றது. அத்துடன் பொலிஸார் விசேட அதிரடிப்படையினரின் சேவைகளையும் ஐ.தே.க. பாராட்டுகின்றது என்று ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று முன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அறிக்கையொன்றை ரணில் விடுத்தார். அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; வடக்கில் ஏற்பட்டிருக்கும் இராணுவ வெற்றிகளுக்காக ஆயுதப்படைகளுக்கு ஐ.தே.க. மரியாதை செலுத்துகின்றது. அவர்களின் வெற்றிகள் உண்மையில் மனதில் கொள்ளப்படக்கூடியவையாகும். இப்போது வடமாகாணத்தின் சகல மாவட்டங்களும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. புலிகளின் பலத்தை எமது படைகள் உடைத்துவிட்டன.
இந்த இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வை செய்த ஜனாதிபதி , பிரதமர் , அமைச்சர்கள் ஆகியோரையும் நாம் பாராட்டுகிறோம். அதேவேளை பலதடைகளை அரசு தாண்ட வேண்டியுள்ளதையும் நாம் நினைவூட்டுகிறோம். உண்மையான அரசியல் தீர்வே இறுதியான சமாதானத்தை கொண்டுவரும் . அதுவும் தாண்டப்படவேண்டிய தடைகளில் ஒன்றாக உள்ளது. அத்துடன் அது வன்னியில் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமைபற்றியதாகும். அவர்கள் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டவர்கள். சகல பிரஜைகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை நாம் வலியுறுத்துகிறோம். இந்த விடயம் கடமை மட்டுமல்லாமல் பிரக்ஞையானதுமாகும