இலங் கையில் ஏற்பட்டிருக்கும் “மனிதாபிமான நெருக்கடி’ தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் விசனமும் கவலையும் தெரிவித்துள்ளது. வடக்கில் மோதல் பகுதிகளில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவிடம் கவலை தெரிவித்துள்ளனர். “சர்வதேச தரத்திற்கு மதிப்பளிக்கப்பட வேண்டியது அவசியம்’ என்று கோடிட்டுக் காட்டியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பெனிற்றா பெரேரோ வோல்ட்னர், ஐ.நா.மனிதாபிமான முகவரமைப்புகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள கட்டுப்பாடுகள் இருக்கக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் இக்கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்தும் பாதையை நோக்கிய அரசியல் தீர்வை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று பெனிற்றா கூறியுள்ளார். அதேசமயம், அண்மையில் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயம் செயற்படும் முறைமை குறித்து விளக்கங்களை அளிக்குமாறு பெரேரோ வோல்ட்னரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையாளர் கதரீன் அஸ்ரனும் இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஒன்றியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான கவலைகளையும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம, பெல்ஜியப் பிரதமர் ஹேர்மன் ரொம்பையையும் சந்தித்துள்ளார