“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாம் உருவாக்கிய கட்சி.தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும் தயாராகவே உள்ளோம்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தொிவித்துள்ளாா்.
கிளிநொச்சியில், நேற்று (03.01.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளாா்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாம் உருவாக்கிய கட்சி. அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டியும், விமர்சித்தும் உள்ளோம். அந்த வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும் தயாராகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். அந்த ஒற்றுமைக்காக தமிழ்த் தலைவர்கள் முன்வர வேண்டும்.
நாங்கள் பல தேர்தல்களுக்கு முகம்கொடுத்து பல வெற்றிகளை கண்டுள்ளோம். இதனால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் போன்ற இடங்களில் எமது கட்சியின் செயற்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறோம். இம்முறை வடக்கில், முதன் முறையாக யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் எமது கட்சி போட்டியிடுவது தொடர்பாக எனது அமைப்பாளர் உடன் இன்று சந்திக்க உள்ளோம்.
தமிழ்த் தலைமைகளின் கடந்த கால செயற்பாடுகள் அரசியல்களை விட்டு தற்போது காணப்படும் சூழலை கருத்தில் கொண்டு ஒற்றுமையாக செயற்பட முன்வர வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.