அபே ஜன பல கட்சியில் இருந்து தேசிய பட்டியலில் பாராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்ட வணக்கத்துக்குரிய அத்துரலியே ரதன தேரர் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார்.
பாராளுமன்ற அமர்வு ஆரம்பத்தில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.
கடந்த பொதுத் தேர்தலில் அபே ஜனபல கட்சியினால் பெற்றுக் கொள்ளப்பட்ட தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக அத்துரலியே ரதன தேரரின் பெயர் தேசிய தேர்தல் ஆணைக்குழுவினால் கடந்த தினம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.