‘யுத்த நிறுத்தம் அல்ல’ மக்கள் பாதுகாப்பே – முகர்ஜி வருகையின் முக்கிய நோக்கம் – ஏகாந்தி

prathaf-mahi.jpgஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்றுமுன்தினம் (27) செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசியவேளை வன்னியில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சு எதனையுமே எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும் அவர்களுக்கு உதவுவதற்கும் அடிப்படை முயற்சிகள் மேற்கொள்ளப் படவேண்டும் என்று மட்டுமே மஹிந்தவிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்று அறிவிக்கப்படுகிறது. அமைச்சர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை மாலை கொழும்புக்கு திடீர் விஜயம் செய்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசிவிட்டு புதன் அதிகாலை  அவசரமாகப் புதுடில்லி திரும்பியது தெரிந்ததே.

“பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அவர்களுக்கு உதவுவதற்கும் அடிப்படை முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென நாங்கள் இலங்கை அரசைக் கோரியுள்ளோம்’ என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். மோதல் நடைபெறும் பகுதிகளின் மனிதாபிமான நிலைவரம் குறித்து ஆராயப்பட்டது என்றும் அரசு பொதுமக்களின் உயிரிழப்புகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமக்கு உறுதியளித்துள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இலங்கை அரசு பாதுகாப்பு வலயங்களை மதிக்கிறது எனவும்  ஜனாதிபதி கூறியுள்ளார் என்று முகர்ஜி சொன்னார்.

பொதுமக்களின் அவலங்களை நீக்கி அவர்களது பாதுகாப்பை உறுதிசெய்வதே தனது இந்த இலங்கை விஜயத்துக்கான அடிப்படைநோக்கம் என்றும் முகர்ஜி தெரிவித்திருக்கிறார்.அனைத்து இலங்கையர்களும்  குறிப்பாக மோதலின் பாதிப்பை  அனுபவித்துள்ள தமிழ் மக்கள்  கூடிய விரைவில் சுமூக வாழ்க்கையை அனுபவிப்பதை உறுதி செய்வதற்காக இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுவோம் என முகர்ஜி தெரிவித்துள்ளார்.
 
pranab.jpgமேலும் கருத்துத் தெரிவித்த பிரணாப் முகர்ஜி, இலங்கை – இந் திய ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப் பட்ட அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்தை மிக விரைவில் நடைமுறைப்படுத்தப் போவதாக ஜனாதிபதி மஹிந்த கூறினார். அதேநேரம், அதில் கூறப்பட்டு ள்ள அதிகாரப் பகிர்வு யோசனைகளை மேலும் விருத்தி செய்து அமுல் செய்வதற்கான வழிமுறைகளையும் ஜனாதிபதி ஆராய்ந்து வருவதாகவும் முகர்ஜி கூறினார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நான் இலங்கை சம்பந்தமாக தெரி வித்துக்கொண்ட விடயங்க ளையிட்டு மகிழ்ச்சியடை கின்றேன். இலங்கையின் அண்மைக்கால அபிவிருத்தி கள் இரு நாடுகளுக்குமி டையிலான நட்புறவுகள், பரஸ்பர அக்கறையுள்ள பிரா ந்திய விடயங்கள் குறித்தும் நாம் பேச்சுவார்த்தை நடத்தி னோம். இலங்கை-இந்திய உறவுகள் மிக உறுதியாக வளர்ச்சி கண்டு வருகின்றன. எமது உறவுகளை மேலும் பலப்படுத்த வேண்டிய அவசியம் தொடர்ந்தும் உணரப்பட்டு வருகின்றது.

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்து தான் கொண்டுள்ள நம்பிக்கை களை இலங்கை ஜனாதிபதி விளக்கினார். வடமாகாணம் உட்பட இலங்கை முழுவதும் இயல்பு நிலையைக் கட்டியெழுப்பத் தேவையான அரசியல் சந்தர்ப்பத்தை வழங்க இராணுவ வெற்றிகள் வழிவகுத்துள்ளன. 23 வருடகால மோதல்களின் பின் இந்த நிலை தோன்றியிருப்பதாக நான் தெளிவு படுத்தினேன். இலங்கை ஜனாதிபதியும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளதோடு தன் மனநிலையும் இதுவே என்று கூறினார். இலங்கை அரசாங்கத்தோடு சேர்ந்து சகல இலங்கையரும் குறிப்பாக மோதல்களால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் விரைவில் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ள எம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவோம்.

இந்த வகையில் இலங்கையின் வட பகுதியை மீளக்கட்டியெழுப்ப நாம் தயா ராக இருக்கின்றோம் என்பதையும் நான் இலங்கை ஜனாதிபதிக்குக் கூறினேன். இதன்மூலம் யுத்தத்தின் அழிவுகளிலிருந்து விடுபட்டு உறுதியான சமாதானத்துக்கான பொருளாதார மற் றும் அரசியல் அடித்தளங் களை இடுவதன் மூலம் சகல சமூகங்களும் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்த முடியுமென்பதே எமது நம்பிக்கையாகும். இதனடிப்படையில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் தேவைப்படும் இடங்களில் புனரமைப்புப் பணிகளில் ஒருங்கிணைந்து செயற்படவுள்ளோம். இந்திய அனுசரணையுடன் 500 மெகா வோட் மின் உற்பத்தி திட் டம் திருகோணமலையில் ஆரம்பிக்கப்படவுள்ளதையிட்டு நான் மகிழ்க்சியடை கின்றேன்.

இலங்கை அரசியல் சாசன த்தின் 13வது திருத்தத்தை மிக விரைவில் அமுல் செய்யப் போவதாகவும் இல ங்கை ஜனாதிபதி கூறினார். இது 1987ம் ஆண்டு இல ங்கை-இந்திய ஒப்பந்தத் தின் கீழ் உருவாக்கப்பட் டது. இதில் கூறப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு யோசனை களை மேலும் விருத்தி செய்து அமுல் செய்வதற் கான வழிமுறைகளையும் அவர் ஆராய்ந்து வருகின்றார். மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள மனிதாபிமான நிலைமைகள் குறித்தும் நாம் கவனம் செலுத்தினோம். மோதல்களின்போது தமிழ் மக்கள் பாதிக்கப்படுவதைக் குறைக்கும் வகையில் ஏற் படுத்தப்பட்டுள்ள பாதுகா ப்பு வலயத்தை மதித்து நட க்கப் போவதாக இலங்கை அரசு உறுதியளித்துள்ளது. மோதல்களால் பாதிக்கப் படும் மக்களுக்கு இந்தியா தொடர்ந்தும் உதவிக்கரம் நீட்டும்.

எமது கலந்துரையாடலின் பின் தமிழ்நாடு முத லமைச்சர் திரு. மு. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையில் சர்வகட்சி குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரடியாகப் பார்வையிடுமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்துள்ளார். எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் ஆயுதங்களைக் கைவிட்டு விட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துகொள்ள வேண்டுமென இவர்கள் கோரிக்கை விடுக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.  பாதிக்கப்பட்ட பகுதிகளில் மிக விரைவில் இயல்பு நிலையையும், ஜனநாயகத்தையும் மீளக்கட்டியெழுப்ப வேண்டியது, சமாதானத்தையும் ஸ்திரப்பாட்டையும் நிலைநிறுத்துவதில் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளாகும்.  இந்த இலக்கை அடைய இந்தியா சகலரோடும் இணைந்து சகல வழிகளிலும் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கும்.

முகர்ஜி வருகையின் முக்கிய நோக்கம் “யுத்த நிறுத்தம் அல்ல’ – கெஹலிய ரம்புக்வெல

இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் கொழும்பு விஜயம் யுத்தநிறுத்தம் குறித்து பேசுவதற்காக அல்லவென்றும் வடக்கை முழுமையாக மீட்டதும் அடுத்தகட்டமாக அங்கு மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி பணிகள் குறித்து ஆராய்வதே முகர்ஜி வருகையின் முக்கிய நோக்கம் என்றும் அமைச்சரும் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல நேற்று புதன்கிழமை தெரிவித்தார். ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் முகர்ஜியின் கொழும்பு பயணம் இடம்பெற்றதாகவும் கெஹலிய ரம்புக்வெல கூறினார். பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் இதனை தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது;

இலங்கை நிலைவரம் குறித்து உண்மைத் தன்மையை அறிந்துகொள்ளுமாறு ஜனாதிபதி இந்திய வெளிவிவகார அமைச்சரான பிரணாப் முகர்ஜியை தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைத்தார். அவரை மட்டும் அழைக்கவில்லை. தமிழக முதலமைச்சர் கருணாநிதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும், வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியே வந்துள்ளார். கருணாநிதி சுகவீனம் காரணமாக வரவில்லை. அவசர அழைப்பு விடுக்கப்பட்டதால் வேறு வேலை காரணமாகவோ என்னவோ ஜெயலலிதா வரவில்லை.

பிரணாப் முகர்ஜி இங்கு வருவதற்கு முன் இந்தியாவில் வைத்து தமிழ் மக்கள் குறித்தே தாம் கரிசனை கொண்டுள்ளதாகவும் அதற்கான உதவிகளை நாம் வழங்குவதாகவும் எனினும், விடுதலைப்புலிகள் தொடர்பில் எதுவும் பேசப்போவதுமில்லையென தெரிவித்துள்ளார். இதிலிருந்து பயங்கரவாதம் அழிக்கப்பட வேண்டுமென்ற உறுதியான தீர்மானத்தில் இந்தியா இருப்பது தெரிகிறது. ஜனாதிபதியுடனான முகர்ஜியின் சந்திப்பின் போது யுத்தநிறுத்தம் குறித்தல்லாமல் வடக்கு முழுமையாக மீட்கப்பட்டதும் அங்குள்ள மக்களுக்கு தேவையான அபிவிருத்தி திட்டம் முதல் அனைத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பது குறித்தே பேசப்பட்டது. இதனை செய்வதற்கு இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்க தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் என்றார்.

விடுதலைப்புலிகளிடமிருந்து முழுமையாக வடபகுதியை மீட்டு நாடு ஒன்றிணைக்கப்படுவதை இலங்கை இரண்டாவது தடவையாக சுதந்திரம் பெறுவதாக உணர்கின்றேன். இதன்பின் நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பறங்கியர் உட்பட அனைத்து சமூகங்களையும் சேர்ந்தவர்கள் பயமின்றி சுதந்திரமாக வாழமுடியுமென ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையின் வடபகுதியில் புனர் நிர்மாணப் பணிகளில் ஈடுபட இந்தியா தயார்

இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் வலுவாக அபிவிருத்தியடைந்து வருகின்றன என மேலும் தெரிவித்துள்ள முகர்ஜி, இலங்கையின் வடபகுதியில் புனர் நிர்மாணப் பணிகளில் ஈடுபட இந்தியா  தயார் என்பதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இங்குள்ள நிலைமையை நேரில் பார்வையிட வேண்டும் எனவும், விடுதலைப் புலிகளைத் தேசிய நீரோட்டத்தில் இணையுமாறு அவர்கள் கேகாரிக்கை விடுக்கவேண்டும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தனிப்பட்ட அழைப்பை விடுத்தார் என்றும் கூறியுள்ளார். “வன்னியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயங்கள் மதிக்கப்படும் என்றும், பொதுமக்களின் உயிரிழப்புகளைக்  குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை அரசு  பிரணாப் முகர்ஜியிடம் உறுதியளித்தது.’  எனக் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகர்ஜியின் கொழும்பு பயணம் தமிழர்களுக்கு பெரும் ஏமாற்றம்

தமிழர்களை பொறுத்தவரை இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் கொழும்பு பயணம் ஏமாற்றமாக முடிந்துவிட்டதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருப்பதுடன் தமிழினத்துக்கு எதிரானவர்களை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய வேளை வந்துவிட்டதாக குறிப்பிட்டார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு;

தமிழர்களைப் பொறுத்தவரை பிரணாப்பின் கொழும்பு பயணம் ஏமாற்றமாகவே முடிந்துள்ளது. ஏனெனில், இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வலியுறுத்திக் கூறிவருவதற்கும் பிரணாப் முகர்ஜியின் கொழும்பு பயணத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்தத் தமிழர்கள் எதிர்பார்த்துக் காத்து நிற்கின்ற தமிழகம் வலியுறுத்தி வருகிற போர் நிறுத்தம் பற்றி இலங்கை ஜனாபதியிடமும் அயலுறவுத்துறை அமைச்சர் பேசவே இல்லை என்பதை இந்தியத் தூதரகத்தின் அறிவிப்பு தெளிவுபடுத்தியிருக்கிறது. போரை நிறுத்த என்பதைக் கேட்டு வருவதற்காக இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் கொழும்புக்கு நேரில் சென்று வரத் தேவையில்லை.

இன்றே போர்நிறுத்தம். நாளை பேச்சுவார்த்தை. அடுத்து அமைதியான வாழ்வு. அதற்கு நடவடிக்கை எடுங்கள் என்று இறுதி வேண்டுகோள் விடுத்த தமிழக சட்டப்பேரவைக்கும் அதைத் தேர்ந்தெடுத்த தமிழர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய அவமானம் இது.

தமிழினத்தை அழித்துவிட முயற்சிப்போருக்கு துணைபோய்க் கொண்டிருப்பவர்களையும் வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது. தன்மானம் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடுவோம். இன்றே முடுவெடுத்துச் செயல்படுவோம். தமிழினத்தைக் காப்போம் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • அருட்செல்வன்
    அருட்செல்வன்

    இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவாகவும் இலங்கை அரசுக்கு இராணுவ உதவிகளை செய்து வரும் இந்திய மத்திய அரசை கண்டித்தும் ம.தி.மு.க . சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ தலைமை தாங்கினார்.

    அப்போது அவர் பேசுகையில் , வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதைப் போல அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்பி ஒரு கபட நாடகத்தை செய்திருக்கிறது மத்திய அரசு என்று குற்றம்சாட்டினார். சில நாட்களுக்கு முன்பாகவே திட்டமிட்டு சர்வதேச தொண்டு நிறுவனங்களை அச்சுறுத்தி வெளியே அனுப்பி விட்ட இராணுவம் இப்போது குண்டு வீசி அப்பாவி மக்களை கொல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதேபோல் தமிழகம் முழுவதும் ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. புதுச்சேரியில் ம.தி.மு.க. சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    Reply
  • பகீ
    பகீ

    நக்கீரன் வார இதழில் வந்த பேட்டியில்…மாதா அமிர்தானந்தமயி
    “சுனாமியால் பாதிக்கப்பட்ட சிங்களர்களுக்கும் வீடு கட்டி கொடுத்தேன். ராஜபக்சே இதற்காக என்னை பாராட்டினார். இப்போது இலங்கை தமிழ் மக்களை கொல்வதை பார்க்கும் போது அவர்கள் நல்லவர்கள் இல்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.”

    Amma Blesses Sri Lanka With 100 Tsunami-Relief Homes 23 February 2007, Sri Lanka
    Mata Amritanandamayi Devi (Amma) handed over the keys to 100 homes built by the Mata Amritanandamayi Math to Sri Lankan President Mahinda Rajapaksha in a brief function at the Presidential Palace in Temple Tree, Colombo, Sri Lanka. Amma said that she is grateful that she has been given the opportunity to serve the people of Sri Lanka. In a Welcoming Speech, Ms. Maheswari Velayudham, Political Secretary to Sri Lankan Minister Douglas Devananda, offered thanks to Amma for coming to Sri Lanka and for all the help that she has done.

    Reply