“வெளிநாடுளில் பணிபுரியும் எமது நாட்டுப் பிரஜைகளின் துன்பத்தை கண்டுகொள்ளாத அரசு உக்ரேனிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உயரிய வி.ஐ.பி. சலுகைகளை வழங்குகின்றது” – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு !

“வெளிநாடுளில் பணிபுரியும் எமது நாட்டுப் பிரஜைகளின் துன்பத்தை கண்டுகொள்ளாத அரசு உக்ரேனிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உயரிய வி.ஐ.பி. சலுகைகளை வழங்குகின்றது” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று(05.01.2020) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்று ஒன்றை முன்வைத்து பேசிய போதே இந்தக்கருத்தை குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் தமது விசேட கூற்றில் மேலும் கூறியதாவது ,

எமது நாட்டுப் பிரஜைகள் உலகின் பல நாடுகளில் தொழில்புரிக்கின்றனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இவர்கள் விசேட விமானங்கள் மூலம் இலங்கையை வந்து ஜனாதிபதியை வெற்றியடையவும் செய்திருந்தனர். நாட்டின் பாதுகாவலர்கள் எனவும் இவர்களுக்கு பெயர் சூட்டப்பட்டது.

நாட்டுக்கு அதிகமான அந்நிய வருமானத்தையும் இவர்கள் தான் ஈட்டித்தருகின்றனர். உயிர்த் தியாகங்களை செய்தும், வியர்வை இரத்தம் சிந்தியும் இவர்கள் நாட்டுக்கு அந்நிய வருமானத்தை ஈட்டித் தருகின்றனர். தற்போது இவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். வெளிநாட்டிலுள்ள எமது தூதரகங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தும் சந்தர்ப்பகளில் அங்குள்ளவர்கள் அழைப்பை துண்டிக்கின்றனர். அவர்களின் துன்பத்தை கண்டுக்கொள்வதில்லை.

இந்த அரசாங்கத்தில் நாம் இரண்டு பக்கங்களை பார்க்கின்றோம். எமது நாட்டையும் விட மிகவும் கீழான பொருளாதாரத்தை கொண்டுள்ள உக்ரேனிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்துவரும் போது மிகவும் உயரிய வி.ஐ.பி. சலுகைகளை வழங்குகின்றனர். உக்ரேனிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உயரிய வி.ஐ.பி. சலுகைகளை வழங்கும்போது எமது நாட்டுக்கு கண்ணீரையும் இரத்தத்தையும் சிந்தி அந்நிய வருமானத்தை பெற்றுத் தருபவர்களை அரசாங்கம் ஏன் கண்டுக்கொள்வதில்லை என்றார்.

இதற்கு ஆளும் தரப்பில் பதிலளித்த அமைச்சர் தினேஸ் குணவர்தன,

61ஆயிரம் பேரை வெளிநாட்டில்லிருந்து அரசாங்கம் அழைத்துவந்துள்ளது. நாட்டின் சுற்றுலாத்துறையை மூடிவைக்க வேண்டுமென்றா? எதிர்க்கட்சித் தலைவர் கோருகிறார். ஏனைய நாடுகளை போன்று நாமும் புதிய காலமொன்றை நோக்கி நகர்கிறோம்” என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *