கே.வி. பாலகுமாரன் மூத்த தலைவர் படுகாயம்

Balakumar Kஇலங்கையில் ராணுவத்துடன் நடந்த கடும் சண்டையில் விடுதலை புலிகளின் மூத்த தலைவர் கே.வி. பாலகுமாரன் படுகாயமடைந்ததாக, புலிகள் ஆதரவு இணையதளம் கூறியுள்ளது. முல்லைத்தீவு பகுதியிலுள்ள உடையார்காட்டில் கடந்த திங்களன்று நடந்த கடும் சண்டையில், எல்டிடிஈ மூத்த தலைவரும் சிறப்பு உறுப்பினருமான பாலகுமாரன் படுகாயமடைந்ததாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக, அந்த இணையதளம் கூறுகிறது. ‘ஈழ புரட்சிகர மாணவர் அமைப்பின் (ஈராஸ்) முன்னாள் தலைவரான பாலகுமாரன், கடந்த 90-களில் தனது ஆதரவாளர்களுடன் விடுதலை புலிகள் அமைப்பில் இணைந்தார்.

கடந்த 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு ராணுவத்துடன் நடந்த மோதலில் புலிகளின் மூத்த தலைவர் ஒருவருக்கு ஏற்பட்ட மிகமோசமான பாதிப்பு இதுவாகும். இதற்கு முன் கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பரில், புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் (முன்னாள்) தமிழ்செல்வன் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • ARUL
    ARUL

    உள்கூத்தென்டும் ஒரு கதை அடிபடுது. எதுக்கும் பொறுத்திருந்து பார்ப்பம்.

    Reply
  • kamal
    kamal

    எவ்வளவோ புலிகள் செறிவாக இருக்குமிடத்தில் ஒரு ஈரோஸ்காரர்தான் படுகாயமடைகிறார் என்றால் சந்தேகத்துக்குரியதே. இதுதான் புலிகளின் இக்கட்டான நிலைக் காலச் செயற்பாடு. இவர் ஆரம்பம். இவர்போல் தமிழ்ச்செல்வன்போல் பலரை எதிர்பாக்கலாம்.

    Reply
  • பகீ
    பகீ

    கமல், “..எவ்வளவோ புலிகள் செறிவாக இருக்குமிடத்தில் ஒரு ஈரோஸ்காரர்தான் படுகாயமடைகிறார் என்றால் சந்தேகத்துக்குரியதே…’
    இதுவரை 20,000 மேற்பட்ட புலிகள் இறந்தது தெரியாமல் (?) கதை விடும் உம்போன்றோரை மக்கள் நன்றாக அறிந்து வைத்திருப்பதால் ….

    Reply
  • Thaksan
    Thaksan

    இனி ஏலாது எண்டு படேக்கை சனத்தை எண்டாலும் தப்பிப்போக விட வேணும் எண்டு பாலகுமார் பகிரங்கமாக புலிகள் மத்தியில் பேசினதன் விளைவு தான் இது. அதோட சமாதான காலத்தில நோர்வேக்கு போன பாலகுமார் அங்க பழைய ஈரோஸ்காரரை சந்திச்சு ‘புலியின் போக்குக்கு அவை அழியுறது தவிர்க்க முடியாதது. அவைக்குப் பிறகு விடுதலையை முன்னெடுக்க நாங்கள் தயாராகவேணும். யாரும் ஓய்ந்துவிடாமல் எங்கட ஆட்களை ரெடி பண்ணச் சொல்லுங்கோ. இன்னும் கொஞ்ச காலம்ந்தான் பிரபாவின் ஆட்டமெல்லாம்’ என்று கூறியிருந்தாராம். இது மட்டக்களப்பு பிரபா(ஈரோஸ்) சொன்ன கதை. அப்ப அதை நம்பேல்லை. இப்ப விளங்குது. பொட்டருக்கு லேட்டா எண்டாலும் விசயம் கசிஞ்சு தானிருக்கு போல. ம்ம்ம். புலிக்கு எப்பவும் தமிழன் தான் எதிரி. சிங்களவன்தான் புலியை வளர்த்து விடுறது எண்டது மெய் தான்.

    Reply