வடக்கு மற்றும் தெற்கு மக்களுக்கு இடையிலான சகோதரத்துவத்தை மேம்படுத்தும் முகமான யாழ்தேவி புகையிரத சேவையை காங்கேசன்துறை வரையில் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போக்குவரத்து துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளுக்கென நாட்டின் அனைத்து மக்களையும் இனபேதமற்ற முறையில் இணைத்துக் கொள்ளவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக முழுமையாக சேதமடைந்துள்ள வவுனியாவில் இருந்து காங்கேசன்துறை வரையிலான 169 கிலோமீற்றர் புகையிரத பாதையின் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்துள்ளார்.