முத்துக்குமாரின் தீக்குளிப்பு எதிரொலி – இலங்கை வங்கி தாக்குதல் :தூதரகத்திற்கும் பலத்த பாதுகாப்பு

ஈழத்தமிழருக்காக தீக்குளித்து உயிர்நீத்த வாலிபர் முத்துக்குமாரின் எதிரொலியாக சென்னையில் உள்ள இலங்கை அரசுக்கு சொந்தமான வங்கி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது.

சென்னை வேப்பேரியில் பூந்தமல்லி சாலையில் வணிகவளாகத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கியில் இன்று மாலை 4மணிக்கு 50க்கும் மேற்பட்டவர்கள் காவலுக்கு நின்றிருந்த போலீசாரை மீறி உருட்டுக்கட்டைகளுடன் உள்ளே நுழைந்தனர். வங்கியின் ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன.  முக்கிய ஆவணங்கள் அள்ளி வீசப்பட்டன. வணிகவளாகத்தின் மூன்று அடுக்கு மாடியில் இருந்த கண்ணாடிகளும் அடித்து நொறூக்கப்பட்டன. வங்கி அதிகாரிகளின்  கார்களும் அடித்து நொறுக்கப்பட்டன. பின்னர் போலீசார் வந்து பதட்ட நிலையை சரிப்படுத்தினர். மேலும் இந்த வங்கியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தையும் தாக்கக்கூடும் என்று முன்னெச்சரிக்கையாக அங்கே போலீசார் குவிந்துள்ளனர். எந்த அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • Raikumar
    Raikumar

    தீக்குளித்தவர் பிரபாகரனை சரணடையுமாறோ சயனைடடை உண்ணுமாறோ கோரியபடி செத்திருந்தால் தமிழருக்கு நன்மை தந்திருக்கும்.

    Reply
  • indu
    indu

    please ask pirapakaran to surrender and bring the cease fire to safe the peoples. the other LTTE leaders must act now

    Reply
  • puvanan
    puvanan

    சூசை போன்ற அடுத்த கட்ட தலைவர்கள்(?) பாரிய போர்க் குற்றங்களில் ஈடுபடாமையால் அவர்களுக்கு நடவடிக்கை எடுக்கவும் தப்பிப் பிழைக்கவும் சந்தர்ப்பம் உண்டு.

    Reply
  • Senthan
    Senthan

    முத்துக்குமாரின் கடைசிக்கால கோரிக்கையை வாசிக்கவும்.

    விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…
    அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே…………

    Reply
  • puvanan
    puvanan

    விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…
    அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே…”………

    விதி ஒன்றும் நினைக்கவில்லை. செய்யவும் இல்லை. தலைவர் நினைத்தார். செய்து முடித்தார்.

    Reply
  • புரியாதவன்
    புரியாதவன்

    Tamil Nadu Finance Minister and DMK General Secretary K Anbazhagan said in the state Assembly Today(30.01.09),”many people took shelter on the LTTE side thinking that they would be safer. “But unfortunately, the Tamils are getting killed in the cross fire between the Sri Lankan Army and the LTTE,” he added….-The Hindu-30.01.09. –.தமிழர்களின் “இறையாண்மை” என்பது விடுதலைப் புலிகளின் பாதுகாப்பின் கீழ், பத்திரப்படுத்தப்படும் என்று நான், பேராசிரியர் க.அன்பழகன் உட்பட, பலர் எண்ணினார்கள். ஆனால், “பாதாள உலகில்?” பல ஆபத்தான வெளி சக்திகள் “நியாயபூர்வமாக” புகுந்து தமிழர் வாழ்வில் ஆதிக்கம்செலுத்த குழப்பமான நலன்களுக்காக அனுமதித்தது யார்??, இறையாண்மையை சிதைப்படும்போல் செய்தது யார்??— “வழக்கம் போலவே “கலைஞர்”ரும் அவர் குடும்பத்தாரும் தந்திரமாக “எஸ்கேப்” ஆகிவிட்டார்கள்…..

    Reply
  • markandu
    markandu

    அரசியல் சதுரங்கத்தில் வழமையானதொரு பலிக்கடா.

    Reply