மத்திய மாகாணசபைத் தேர்தலில் கண்டி , மாத்தளை , நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் 17 இலட்சத்து 47 ஆயிரத்து 449 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இந்த வாக்குகளின் அடிப்படையில் கண்டி மாவட்டத்தில் 30 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 16 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 10 பேரும் மத்திய மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் 9 இலட்சத்து 55 ஆயிரத்து 108 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 3 இலட்சத்து 38 ஆயிரத்து 946 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 4 இலட்சத்து 53 ஆயிரத்து 395 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
மேலும் கண்டி மாவட்டத்தில் 13 தேர்தல் தொகுதிகளில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை விபரம் வருமாறு;
ஹாரிஸ்பத்துவ 1,45,752, கம்பளை 89,422, குண்டசாலை 84,871, நாவலப்பிட்டி 82,686, பாத்தும்பறை 76,751, யட்டிநுவர 76,262, உடுநுவர 75,994, செங்கடகல 71,886, பாத்தஹேவாஹெட்ட 64,133, உடுதும்பறை 54,923, கலகெதரை 52,169 , தெல்தெனிய 44,057 , கண்டி 36,702 வேட்பாளர்கள் உள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.