பிரிட்டனை தளமாகக் கொண்டு வெளியாகும் எக்கனோமிஸ்ட் சஞ்சிகையின் புதிய வெளியீட்டிற்கு தாய்லாந்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இராஜ குடும்பம் தொடர்பாக வெளிவரும் கட்டுரை இப்பதிப்பில் பிரசுரமாவதால் மக்களிடையே நிலவும் சர்ச்சைகளுக்கு மத்தியிலேயே இச்சஞ்சிகையின் வெளியீட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசாட்சியை அவதூறாக விமர்சித்தமைக்காக சிறைவைக்கப்பட்டிருக்கும் அவுஸ்திரேலிய எழுத்தாளரின் கட்டுரையே இப்பதிப்பில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை பொது வாழ்வில் தாய்லாந்து மன்னரின் செயற்பாடு குறித்துக் கேள்வி எழுப்பி இருந்தமைக்காக கடந்தமாதமும் இச்சஞ்சிகையின் வெளியீட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.