“இந்தியா எங்களை மாகாணசபை தேர்தலை நடாத்துமாமாறு கூறி நிர்ப்பந்திக்க முடியாது.இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுகின்றார் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எங்கள் உள்விவகாரங்களில் தலையிட முடியாது” எனவும் அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
அவர் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“இந்தியா எங்கள் நட்பு நாடு என்பது உண்மை . இந்தியா சர்வதேச அரங்கில் எந்த விடயத்தையும் எழுப்பலாம் ஆனால் அவர்கள் எங்களை அதனை செய்யுமாறு கூறி நிர்ப்பந்திக்க முடியாது என சரத்வீரசேகர குறிப்பிடடுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன 13வது திருத்தத்தை எங்கள் மீது திணித்துள்ளார்.13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறோ அல்லது மாகாணசபை தேர்தல்களை நடத்துமாறோ இந்தியா எங்களிற்கு அழுத்தம் கொடுக்க முடியாது . அவர்கள் யோசனைகளை முன்வைக்கலாம் ஆனால் நாங்களே தீர்மானிப்போம் அரசியல் தலைவர்கள் தீர்மானிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை காணப்படவில்லை. அரசாங்கம் புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் வரை காத்திருப்பதற்கு தீர்மானித்துள்ளது. புதிய அமைப்பு தேர்தல் முறைகளில் மாற்றத்தை மேற்கொள்ளும். இதன் காரணமாக மாகாணசபை முறை மாற்றப்படவேண்டும்” எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.