இலங்கையில் தொடர்ந்துவரும் இனப்போரில்; அகப்பட்டுள்ள அப்பாவிப் பொதுமக்கள் பேரழிவுகளுக்கு உள்ளாகும் சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்துவரும் செய்திகளையிட்டு தமிழ் சமாதான ஒன்றியம் கவலை கொண்டுள்ளது. இலங்கை அரசும், தமிழீழ விடுதலைப் புலிகளும் பொதுமக்களின் நலன்களை புறந்தள்ளி அப்பாவிப் பொது மக்களை தொடர்ந்து பணயக் கேடையங்களாக பாவித்து போர் புரிவதை தமிழ் சமாதான ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்க விரும்புகின்றது. குறிப்பாக, இலங்கை அரசு ஏற்படுத்தியிருந்த பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்திலிருந்து இலங்கை அரச படைகள்மீது போர் புரிவதன்மூலம் பொது மக்களுக்கு ஏற்படும் இழப்புகள் அதிகரிக்கச் செய்வதை தமிழீழ விடுதலைப் புலிகள் உடனடியாகக் கைவிடவேண்டுமென தமிழ் சமாதான ஒன்றியம் வற்புறுத்துகிறது.
போரில் சிக்குண்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும் வரையில் இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் உடனடியாகப் போர்நிறுத்தம் ஒன்றை செய்யவேண்டுமென தமிழ் சமாதான ஒன்றியம் கோருகிறது. அத்துடன் சர்வதேச கண்காணிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் ஏற்படுத்தப்படும் பாதுகாப்பு வலயமொன்றில் பொதுமக்கள் சென்று சேர்வதற்கான ஏற்பாடுகளை இரு பகுதியினரும் உடனடியாக செய்யவேண்டுமெனவும் தமிழ் சமாதான ஒன்றியம் கருதுகிறது.
போரில் சிக்குண்டுள்ள அப்பாவிப் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும், வணக்கத்திற்குரிய யாழ் அதிமேற்றிராணியார் அவர்களும் மற்றும் ஜக்கிய நாடுகள் ஸ்தாபனமும் இதுவரையில் தெரிவித்திருந்த கருத்துக்களை கவனத்திலெடுத்து செயற்படுமாறு இலங்கை அரசையும், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழ் சமாதான ஒன்றியம் கேட்டுக் கொள்கிறது. இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பில் பொறுப்பாக நடந்துகொள்ள கடமைப்பட்டவர்கள் என்பதை தமிழ் சமாதான ஒன்றியம் நினைவூட்ட விரும்புகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் குறிப்பிட்ட சிறுபகுதியினுள் முடக்கப்பட்ட நிலையில் அவர்களை மேலும் பலவீனப்படுத்துவதற்காக அப்பாவி மக்களைக் கொல்லக்கூடிய போர் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துவது மட்டுமே இலங்கை அரசு தமிழ் மக்கள் மேல் அக்கறை கொண்டுள்ளது என்பதை வெளிபடுத்தும். தற்பாதுபாப்பு அணுகுமுறைகளை மேற்கொண்டு மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துவதை நிறுத்தவும் அப்பிரதேசங்களிலிருந்து மக்கள் வெளியேறவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தமிழ் சமாதான ஒன்றியம் அரச தரப்பினரை கேட்டுக் கொள்கிறது. அதற்கு ஆவன செய்யுமாறு புலம் பெயர்ந்து வாழும் எமது மக்களையும் இந்திய அரசு உட்பட அனைத்து உலக நாடுகளையும் சர்வதேச அமைப்புக்களையும் சமய நிறுவனங்களையும் கரம் கொடுத்து உதவுமாறு தமிழ் சமாதான ஒன்றியம் கோருகிறது.
puvanan
இந்த சமாதான ஒன்றியம் எப்போது திருந்துமோ…!இவ்வளவு கண்டும் கேட்டும் பார்த்தும் புலிக்கு அட்வைஸா அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறதே!
ஈபிஆர்எல் சிறிதரன் நறுக்கென்று சொல்லியிருந்தாரே பாஸிசம் மனந்திருந்துவதில்லை என. மண்டைக்குள் ஏற்றிக் கொள்ளுங்கள்.
Anonymous
இந்த சமாதான ஒன்றியம் எப்போது திருந்துமோ…!
இவ்வளவு கண்டும் கேட்டும் பார்த்தும் ஸ்ரீலங்கா அரசுக்கு அட்வைஸா அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறதே!
வெளிநாட்டு ராஜதந்திரி ஒருவர் நறுக்கென்று சொல்லியிருந்தாரே ஸ்ரீலங்கா பேச்சில் மட்டும் எல்லாம் சரியாக பேசுகிறது ஆனால் இரட்டை நாக்குடன் என. அவர்கள் தமிழ்ர்களை நசுக்கி அழிப்பதையே நோக்கமாக கொண்டுள்ளனர் என்று. மண்டைக்குள் ஏற்றிக் கொள்ளுங்கள்
“This government says all the right things but they speak with forked tongues,” said a Western diplomat who is not authorized to speak on the record. “They just want the Tamils crushed and wiped out.”
http://www.theglobeandmail.com/servlet/story/RTGAM.20090128.wsrilanka28/BNStory/International/?page=rss&id=RTGAM.20090128.wsrilanka28
chandran.raja
“எருமை மாட்டில் மழை பெய்வது போன்றே” புலிகளுக்கு புத்தி சொல்வது .இவ்வளவுகாலமும் சொல்லாத புத்திகளா?புத்தி சொல்லும் காலங்களை
எல்லாம் அவர்கள் கடந்து விட்டார்கள்.
சிறீலங்கா அரசுக்கு அட்வஸ் அள்ளிவீசிக்கொண்டிருக்கிறதே!-பகீ
அரசுக்கு சொல்லாமல் வேறு யாருக்காம் சொல்லமுடியும். புலம்பெயர் தமிழ்மக்கள் இன்று உள்ளநிலையில் உருப்படியாக ஏதாவது காரியமாற்ற வேண்டுமென்றால் புலிகளின் பிடியில் சிக்கியிருக்கும் லட்சகணக்காண மக்களை வெளியேறுவதற்கு பாடுபடுங்கள். எல்லாவகையான முயற்சிகளையும் செய்யுங்கள். இது அரசாங்கத்தாலும் சர்வதேசத்தாலுமே! காரியமாறக்கூடியது. தாமதமாகும் ஒவ்வொரு கணமும் பலஆயிரம் உயிரை பலிகொள்ளக் கூடியது.
lio
many of those people trapped in the vanni area not interested to go along with LTTE they all forced and threatened by LTTE
பகீ
”…அரசுக்கு சொல்லாமல் வேறு யாருக்காம் சொல்லமுடியும்…”
அரசாங்கம் அட்வைஸ் கேட்கவேண்டிய நிலையில் இருக்கெண்டு ஒத்துக்கொண்டதுக்கு நன்றி. அதானே சொல்லியிருந்தாரே ‘இரட்டை நாக்கு’ கதை ஒன்று. வாசிக்கேல்ல போல!
இளங்கோ
பெரிய ஜேசுவின் மீட்பர்கள் வன்னியில் இருந்து மக்களை மீட்க போகினமாம். என்ன பம்மாத்து. வ்தை முகாமில் போகும் மக்களை போட்டு வதைக்கும் படைகளிடமும், ……………………… ஆயிரக்கணக்கான வருடங்கள் வாழ்வாங்கு வாழ்ந்த மக்கள் ஏன் போக வேண்டும் ? அரசின் காசில் தின்று குடித்து அரசுக்கு சேவகம் செய்பவர்களுக்கு விடுதலை ஒரு கிலோ என்ன விலை என்பது போல தான் இருக்கும். மக்களுக்காக இறந்த 20000க்கு மேற்பட்ட புலிகள் தான் விடுதலை வீரர்கள். அவர்கள் வழி தான் மக்கள். …………………. அன்புடன் இளங்கோ.