“கொவிட் தடுப்பூசியை வாங்குவதற்கு அரசாங்கம் தனியார் துறையிடம் பிச்சை எடுக்கின்றது” என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு நுகேகொடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. இது ஒரு முழுமையான பொய். ஏற்றுமதி வணிகர்களிடம் 10 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்குமாறு அரசாங்கம் கேட்டுள்ளது என்பது எனக்குத் தெரியும். இந்த தொகையை நாங்கள் பட்ஜெட்டில் இருந்து நிர்வகித்திருக்க முடியும், அதற்கு பதிலாக நாங்கள் தனியார் துறையிலிருந்து பிச்சை எடுக்கிறோம். ” எனத் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமாக இருந்திருந்தால் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு என்ன உத்திகள் எடுக்கப்படும் என்று கூட்டத்தில் இருந்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விக்ரமசிங்க,
நகைச்சுவையாக அளித்த பதிலில் ” இதில் ஒரு நன்மை இருக்கிறது, நாங்கள் தற்போது அரசாங்கத்திலோஅல்லது நாடாளுமன்றத்திலோ இல்லை” என்று பதிலளித்தார்.