“அரசாங்கம் இந்தியாவின் வேண்டுகோளிற்கு அடிபணிந்து கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை வழங்கியது” என ஜே.வி.யின் டில்வின் சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அச்சம் காரணமாக இந்தியா கோரியதை வழங்க தீர்மானித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் பங்குகளை விற்பதன் மூலம் இலங்கைக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை எனவும் இலங்கை அரசாங்கம் கொழும்புதுறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் 49 வீத பங்குகளை இந்தியாவிற்கு வழங்க தீர்மானித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்ட பின்னர் தனக்கு ஏதாவது தரவேண்டுமென இந்தியா வேண்டுகோள் விடுத்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா தனக்கு ஏதாவது வேண்டுமென கோரியது அரசாங்கம் இந்தியாவின் வேண்டுகோளிற்கு அடிபணிந்து கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை வழங்கியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.