இலங்கைக்குக் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யத் தனியார் துறைக்கு அனுமதியில்லை என்று அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளைக் கையாளும் ஜனாதிபதியின் குழு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
களஞ்சிய வசதிகள் உள்ள தனியார் துறையினர் கொரோனாத் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யத் தயாராகி வருகின்ற நிலையிலேயே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிகளைக் கையாளும் பொறுப்பை அரசு கொண்டுள்ள நிலையில், தனியார் துறைக்குத் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய அனுமதிப்பது பாதுகாப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிகளை இறக்குமதி செய்யத் தனியார் துறை கோரிக்கை விடுத்த போதிலும், இறக்குமதி செய்யவோ, விற்பனை செய்யவோ அரசு தடை விதித்துள்ளது.