மக்கள் விரும்பினால் வெளியேற புலிகள் அனுமதிக்க வேண்டும்: தமிழ் தேசிய கூட்டமைப்பு

tna.jpgஇலங்கையின் ஜனாதிபதி வடக்கே போர் நடக்கும் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை விடுதலைப் புலிகள் விடுவிக்க வேண்டும் என்று கோரியுள்ள நிலையில், அவ்வாறு மக்கள் வெளியேற விரும்பினால், அதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் தலைவரான இரா சம்பந்தர் தெரிவித்தார்.

எனினும், அப்பகுதியிலிருந்து வெளியேறுவது குறித்த முடிவை அங்கிருக்கும் மக்கள்தான் எடுக்க வேண்டும் என்றும் அங்கிருந்து மக்கள் வெளியேற முடியாததற்கு விடுதலைப் புலிகள் மட்டுமே காரணம் என்று கூறப்படுவது ஏற்க முடியாதது என்றும் சம்பந்தர் கூறுகிறார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

6 Comments

 • nada
  nada

  அடுத்த 48 மணி நேரத்துக்குள் அவர்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்கும்படி புலிகள் இயக்கத்துக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வியாழக்கிழமை மாலையில் பகிரங்க அறிக்கை மூலம் விடுத்தகோரிக்கையைப் புலிகள் இயக்கம் அடியோடு நிராகரித்து விட்டது./தேசம்

  Reply
 • yogamuthu
  yogamuthu

  இவ்வளவு காலமும் நீங்கள் எங்கே போனீர்கள் என்ன இன்னும் உங்கள் தலைவர் பிரபாகரனா அல்லது மகிந்தாவா இன்னும் நீங்கள் தனித்தமிழ் ஈழத்திற்கான தனிநாட்டிற்கான போராட்டத்தைத்தான் முன்னெடுக்கிறீர்களா?

  இப்போது உங்கள் நிலைப்பாடுகள் என்ன? புலிகள் பற்றி உண்மையை விளக்குவீர்களா? நீங்கள் தொடக்கி வைத்த தமிழ் ஈழப் போராட்டம் உங்கள் பாராளமன்ற கதிரைகளக்காகவே அன்றி வேறு எதற்கு?

  Reply
 • msri
  msri

  மக்கள் அழிவில் அரசியல் பிழைப்பு நடாத்தும் மக்கள் விரோதிகளை நீக்கிவிட்டுப்பார்த்தால் நாலுலட்சம் மக்கள் வெளியேற 48மணித்தியாலங்கள் போதுமா? இதைப் போர்நிறுத்தமென்று இந்தியாவும் > மகிந்தாவும் அவரின் …………………. கூத்தடிக்கின்றார்கள்!

  Reply
 • palli
  palli

  அதென்ன மக்கள் விருப்பினால் என ஒரு போடுகை. மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு இரு மிருகத்தையும்விட்டு கண்டிப்பாக போகவேண்டும். இதுக்கு சர்வதேச சமூகம் உதவ வேண்டும்.
  பல்லி.

  Reply
 • மொட்டைத் தலையன்
  மொட்டைத் தலையன்

  அதென்ன மக்கள் விருப்பினால் என ஒரு போடுகை. மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு இரு மிருகத்தையும்விட்டு கண்டிப்பாக போகவேண்டும். இதுக்கு சர்வதேச சமூகம் உதவ வேண்டும்.
  பல்லி.– “பல்லியின் சொல்லுக்கு நிச்சயம் பலனுண்டு… இதைப் பகுத்தறிவாளர் மறுப்பார்”….–தி.மு.க. கட்சிப் பிரச்சாரப் பாடல்

  Reply
 • Thaksan
  Thaksan

  யாழில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற 2 மணித்தியாலம் போதுமென்றால் முல்லைத்தீவில் இருந்து தமிழர் வெளியேற 48 மணித்தியாலம் போதாதா? பிரபாவை விட மகிந்த 24 மடங்கு கருணையுள்ளவராய் படேல்லையா உங்களுக்கு???

  Reply